search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீலகிரியில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
    X

    நீலகிரியில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை

    • கூடலூர் 2-ம் மைல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ஊட்டி:

    ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இதனால் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் திருவிழாக்கள், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் இன்று 2-வது ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கூடலூர் அருகே உள்ள பொக்காபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மேல் கூடலூர் சந்தை கடை மாரியம்மன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து காலை 11 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர். மங்கல பொருட்கள் முன்னதாக கூழ் ஊற்றப்பட்டது. மேலும் மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து இரவு 8 மணி வரை பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    இது தவிர கூடலூர் 2-ம் மைல் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதேபோன்று ஊட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. கோவிலுக்கு காலை முதல் மாலை வரை ஏராளமான பெண்கள் உள்பட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் கற்பூரம் ஏற்றி மனமுருக பிரார்த்தனை செய்தனர்.

    சிறப்பு பூஜை அரசு ஆஸ்பத்திரி வீதியில் உள்ள ஓம்சக்தி பத்ர காளியம்மன் கோவில், அக்ரஹாரம் பகுதியில் உள்ள துளிர் காத்த அம்மன் கோவில், காந்தல் மூவுலகரசியம்மன் கோவில், கூடுதல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோவில் உள்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. கோத்தகிரி கடைவீதியில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் மற்றும் ஊஞ்சல் வழிபாடு நடைபெற்றது

    Next Story
    ×