என் மலர்
உள்ளூர் செய்திகள்

சிறப்பு முகாம் நடைபெற்ற போது எடுத்தபடம்.
நெல்லையில் சிறப்பு மருத்துவ முகாம்
- குற்றாலம் ரோடு லாலுகாபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மருத்துவமுகாம் இன்று நடைபெற்றது.
- ஈசிஜி., ஸ்கேன், பல், சித்தமருத்துவம், ரத்தம் பரிசோதனை, ரத்த அழுத்தம், தாய் சேய் நலம் உள்ளிட்டவை குறித்து பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
நெல்லை:
நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவின்படி குற்றாலம் ரோடு லாலுகாபுரத்தில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் மருத்துவமுகாம் இன்று நடைபெற்றது. மேயர் சரவணன் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற சிறப்பு மருத்துவமுகாம் காலை 9 மணிமுதல் ெதாடர்ந்து நடைபெற்றது.
முகாமில் ஈசிஜி., ஸ்கேன், பல், சித்தமருத்துவம், ரத்தம் பரிசோதனை, ரத்த அழுத்தம், தாய் சேய் நலம் உள்ளிட்டவை குறித்து பரிசோதனை மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. இதில் சத்து உணவுகள் குறித்து கண்காட்சி நடைபெற்றது. நகர்நல அலுவலர் சரோஜா முகாமை தொடங்கி வைத்தார். மருத்துவர்கள் பிரித்தவ்சி, ராணி, ரஞ்சித் மற்றும் செவிலியர்கள் தூய்மை இந்தியா திட்ட பணியாளர்கள், டெங்கு ஒழிப்பு பணியாளர்கள், தூய்மை பணி மேற்பார்வை யாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சுகாதார அலுவலர் இளங்கோ முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.






