என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மூலை அனுமாருக்கு கரும்புகளால் சிறப்பு அலங்காரம்
    X

    சிறப்பு அலங்காரத்தில் மூலை அனுமார்.

    தஞ்சை மூலை அனுமாருக்கு கரும்புகளால் சிறப்பு அலங்காரம்

    • தஞ்சை மேலே வீதியில் மூலை அனுமார் கோவில் உள்ளது.
    • மூலை அனுமாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மேலே வீதியில் மூலை அனுமார் கோவில் உள்ளது.

    மூலை அனிமாரின் வாலில் சனீஸ்வர பகவான் உட்பட நவகிரகங்கள் வாசம் செய்வதாக ஐதீகம். சனிதோஷம் உள்ளிட்ட நவக்கிரகங்கள் தோஷங்கள் மற்றும் வாஸ்து தோஷங்கள் போக்கும் தலமாகும்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் பொங்கல் அன்று சூரியனுக்கு அனுமன் நன்றி தெரிவிப்பதாக ஐதீகம். அதன்படி நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    மூலை அனுமாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.

    தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து மூலை அனுமாருக்கு கரும்புகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மாலையில் சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கரும்புகள் அலங்காரத்தில் காட்சியளித்த மூலை அனுமாரை ஏராளமான பக்தர்கள் மனம் உருகி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×