search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு ஊர்வலம்
    X

    விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்ட போது எடுத்த படம்.

    புகையில்லா பொங்கல் விழிப்புணர்வு ஊர்வலம்

    • பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரை பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் பண்டிகை கொண்டாடுவது குறித்து உறுதிமொழியேற்பு மற்றும் பொங்கல் விழா நடைபெற்றது.
    • நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் அறிவுரையின்படி புகையில்லா பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, வெங்கரை பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் பண்டிகை கொண்டாடுவது குறித்து உறுதிமொழியேற்பு மற்றும் பொங்கல் விழா

    நடைபெற்றது. சேலம் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் கணேஷ்ராம் உத்திர வின்படி, நாமக்கல் கலெக்டர்

    ஸ்ரேயா பி.சிங் அறிவுரையின்படி புகையில்லா பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்க ளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    முன்னதாக வெங்கரை பேரூராட்சி அலுவலகம் முன்பு பேரூராட்சித் தலை

    வர் விஜி(என்கிற) விஜயகு மார் தலைமையில் செயல் அலுவலர் சீனிவாசன், துணைத் தலைவர் ரவீந்தர் ஆகியோர் முன்னிலையில், பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியா ளர்கள் புகையில்லா பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்களுடன் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் பேரூராட்சி அலுவலக வளாகம் முன்பு பொங்கல் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டு அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுவினர் கலந்து கொண்டனர்.

    அதேபோல் பாண்ட மங்கலம் பேரூராட்சியில் புகையில்லா பொங்கல் பண்டிகை கொண்டாடுவது குறித்து உறுதிமொழியேற்பு மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் பாண்டமங்கலம் பேரூராட்சி அலுவலகம் முன்பு, பேரூராட்சித் தலை வர் சோமசேகர் தலைமை யில், செயல் அலுவலர் திலகராஜ், துணைத் தலை வர் பெருமாள் என்கிற முருக

    வேல் ஆகியோர் முன்னிலை

    யில் பேரூராட்சி பணியா ளர்கள், தூய்மை பணியா ளர்கள் புகையில்லா பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்களுடன் உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

    Next Story
    ×