search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரி  பேரூராட்சி கூட்டம்
    X

    பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமையில், துணைத்தலைவர் லட்சுமி ராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கூட்டம் நடைபெற்ற போது எடுத்த படம்.


    சிவகிரி பேரூராட்சி கூட்டம்

    • கூட்டத்திற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார்.
    • வீட்டு மனைகளுக்கு அப்ரூவல் வழங்க கோரிக்கை வைத்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நடைபெற்றது.

    பேரூராட்சி மன்றத் தலைவர் கோமதி சங்கரி சுந்தர வடிவேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் அனைத்து வார்டு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மன்றத்தில் உள்ள அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

    பேரூராட்சி மன்றத்தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் ஆகியோர் சிவகிரி பகுதியில் உள்ள ஓடைகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.


    அதற்கு உடனடியாக செயல் அலுவலர் ஒப்புதல் அளித்தார். சிவகிரி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்தனர். அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    மேலும் சிவகிரி பகுதியில் அப்ரூவல் இல்லாத வீட்டு மனைகளுக்கு அப்ரூவல் வழங்க கோரிக்கை வைத்தனர். தகுந்த நடவடிக்கை எடுப்பதாக செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன் உறுதியளித்தார்.

    வீடுகளில் உள்ள குடிநீர் இணைப்புகளில் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பதாக தகவல் வருகிறது. ஆய்வு செய்யும் போது குடிநீர் இணைப்புகளில் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பது தெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மோட்டார் பறிமுதல் செய்யப்படும் எனவும் தலைவர், துணைத் தலைவர், செயல் தலைவர் ஆகியோர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் வீடுகளில் உள்ள முறை இல்லாத குடிநீர் இணைப்புகளுக்கு பேரூராட்சியில் முறையான அனுமதி வாங்கி பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு சிவகிரி பேரூராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×