என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரதோஷ பூஜை விழா
    X

    பிரதோஷ பூஜை விழா நடந்தது.

    பிரதோஷ பூஜை விழா

    • மானாமதுரை பகுதி சிவாலயங்களில் பிரதோஷ பூஜை விழா நடந்தது.
    • ஆனிமாத முதல் பிரதோஷ தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மானாமதுரை சுற்றி உள்ள சிவாலயங்களில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் உள்ள சிவாலயங்களில் பிரதோஷ பூஜைகள் நடந்தன. வைகை ஆற்றுகரையில் உள்ள ஆனந்தவல்லி சோமநாதர் கோவிலில் நடந்த பூஜையில் நந்திக்கும் சோமநாதருக்கும் பல வகையான அபிஷேகம், உற்சவர் புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது.

    சிருங்கேரி சங்கரமடத்தில் உள்ள ஆதிசங்கரருக்கும் இடைக்காட்டூர் மணிகண்டேசுவரருக்கும், வேம்பத்தூர் கைலாச நாதருக்கும், நாகலிங்கம் நகரில் உள்ள அண்ணா மலையாருக்கும், மேலெ நெட்டூர் சொர்ண வாரீஸ்வ ரருக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன.

    மானாமதுரை-பரமக்குடி சாலையில் உள்ள வழிவிடு பெரியநாச்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள காசிவிஸ்வநாதர் மற்றும் காசிநந்திக்கு ஏராளமான பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்து தொட்டு வழிபாடு செய்தனர். ஆனிமாத முதல் பிரதோஷ தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் மானாமதுரை சுற்றி உள்ள சிவாலயங்களில் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×