search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்
    X

    பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார்

    • பிற மாநிலங்களுக்கு முன்மாதிரி முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என அமைச்சர் பெரியகருப்பன் பெருமிதம் கொள்கிறார்.
    • குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட செட்டிநாடு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ரூ.58 கோடி மதிப்பில் பல்வேறு கட்டமைப்புகளுக்கான கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஆஷா அஜீத் தலைமை தாங்கினார். அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

    விழாவில் அவர் பேசியதாவது:-

    முதலமைச்சர் தலைமை யிலான தமிழக அரசின் அனைத்து துறைகளும் சிறந்து விளங்கி, தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கடந்த 2021-ல் தேர்தலின் போது பொதுமக்களுக்கு அளித்த வாக்குறுதியினை நிறைவேற்றிடும் பொருட்டு, 85 சதவீதம் வாக்குறுதிகள் தற்போது வரை நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், சொன்ன வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத பல்வேறு புதிய திட்டங்களையும் தமி ழகத்தில் சிறப்பாக செயல்ப டுத்தி வருகி றார்கள்.

    மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, பெண் கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டம் ஆகிய திட்டங்கள் மட்டுமன்றி, வருகின்ற செப்டம்பர் 15-ம் தேதி அன்று கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலும், தேர்தல் வாக்குறுதியிணை நிறைவேற்றிடும் பொருட்டு, சிவகங்கை மாவட்டத்தில் சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி ஏற்படுத்தப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் அதனையும் நிறைவேற்றியுள்ளார்கள்.

    இதுபோன்று பொதுமக்களுக்கும், மாணாக்கர்களுக்கும் பயனுள்ள வகையில் தொலைநோக்கு பார்வையுடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்படுவது மட்டுமின்றி, அதற்கான அனைத்து அடிப்படை கட்டமைப்புகளையும் மேம்படுத்தி, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான முதலமைச்சராக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்ந்து வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் இந்நிகழ்ச்சியில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, கானாடுகாத்தான் பேரூராட்சி தலைவர் ராதிகா, வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதன்மை அலு வலர் பாபு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×