என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரசு அலுவலர்களுக்கான மருத்துவ முகாம்
- இளையான்குடியில் அரசு அலுவலர்களுக்கான மருத்துவ முகாமை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
- மாவட்ட மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சித் துறை சார்பில் அரசு அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர் குடும்பத்திற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. சுபமதியரசன், ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட மருத்துவ அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள், அவர்களது குடும்பத்தினர் கலந்துகொண்டனர்.
Next Story






