என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வைகை ஆற்றில் அதிக அளவில் வளரும் புற்களால்  கால்நடைகள் வளர்ப்போர் மகிழ்ச்சி
    X

    மானாமதுரை வைகை ஆற்றில் வளர்ந்துள்ள புற்கள்.

    வைகை ஆற்றில் அதிக அளவில் வளரும் புற்களால் கால்நடைகள் வளர்ப்போர் மகிழ்ச்சி

    • வைகை ஆற்றில் அதிக அளவில் வளரும் புற்களால் கால்நடைகள் வளர்ப்போர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
    • தடுப்பணையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டார பகுதி கிராமங்கள் முழுவதும் பூர்வீக வைகை பாசனபகுதியாகும். தற்போது மானாமதுரை நகர் பகுதியில் உள்ள வைகைஆற்றில் சித்திரை திருவிழாவிற்காக தண்ணீர் திறந்து விட்டபோது ஆற்றில் தண்ணீர் சென்றது.

    சில நாட்களுக்கு முன்பு விவசாயத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு கால்வாய்கள் வழியாக கண்மாய்களுக்கு நீர் செல்வதால் பாசன பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது ஆற்றில் தொடர் நீர்வரத்தால் ஆறு முழுவதும் புல்செடிகள் அதிக அளவில் வளர்ந்து மேய்ச்சல் பகுதியாக மாறி உள்ளது. ஆடு, மாடுகள் வளர்ப்பவர்கள் கால்நடைகளை காலை முதல் மாலை வரை மேயவிட்டு வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர்.

    கொளுத்தும் வெயிலுக்கு மானாமதுரை வைகை ஆறு இயற்கை புல்வெளியாக பச்சை போர்வை விரித்தது போல் காண்போரின்கண்களுக்கு குளிர்ச்சியாகவும் உள்ளது. தடுப்பணையில் தண்ணீர் தேங்கி உள்ளதால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

    Next Story
    ×