search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாக்கோட்டை ஒன்றியக்குழு கூட்டம்
    X

    சாக்கோட்டை ஒன்றிய குழு கூட்டம் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.

    சாக்கோட்டை ஒன்றியக்குழு கூட்டம்

    • காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
    • மேலாளர் ராஜேந்திரகுமார் நன்றி கூறினார்.

    காரைக்குடி

    காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஒன்றிய குழு சாதாரண கூட்டம் தலைவர் சரண்யா செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது.ஆணையாளர் ஹேமலதா வரவேற்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) கேசவன் முன்னி லை வகித்தார்.

    கூட்டத்தில் 6-வது வார்டு தி.மு.க. உறுப்பினர் சொக்கலிங்கம், கடந்த மாதம் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகள் முகாமில் நரம்பியல் மருத்துவர் கலந்து கொள்ளாததால் சிவகங்கைக்கு செல்லு மாறு கூறியதால் மாற்றுத் திறனாளிகள் சிரமத்திற்குள் ளாயினர்.அனைத்து முன் னேற்பாடுகளுடன் முகாமை நடத்த வேண்டும் என்றார்.

    10-வது வார்டு உறுப்பினர் தேவிமீனால் பேசுகையில்,ராஜீவ்காந்தி நகரில் வசித்து வருபவர்க ளிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற இருப்பதால் வீடு களை காலி செய்ய சொல் கிறார்கள். வறுமையில் வாடும் அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் அல்லது மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.சங்கரா புரம் பகுதிகளில் மின்கம்ப ங்கள் பல பழுதாகி உள்ளன. அவற்றை மாற்ற வேண்டும் என்றார்.

    இதற்கு பி.டி.ஓ கேசவன் பதிலளிக்கையில், ஆக்கிர மிப்புகளை அகற்றுவது அவசியம். புதிதாக கட்ட ப்பட்டு வரும் அரசு அடுக்குமாடி குடியிருப்பு களில் முன்னுரிமை வழங்க வழி செய்யப்படும் என்றார்.

    அ.தி.மு.க. கவுன்சிலர் சுப்பிரமணியன் பேசு கையில், மழைக்காலத்திற்கு முன்பாக பழுதடைந்து உள்ள சாலைகளை புதிதாக அமைக்க வேண்டும் என்றார்.

    தலைவர் சரண்யா செந்தில் நாதன் பேசுகையில், உறுப்பினர்கள் தங்கள் பகுதி களில் குளம், கண்மாய் கரைகளை பலப்படுத்தவும், தகுந்த முன்னேற்பாடுகள் உள்ளனவா? என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மின்கம்பங்கள் சரி செய்யப்பட வேண்டும். மழைக்காலம் தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார். தொடர்ந்து ரூ.ஒரு கோடி மதிப்பில் சாலை களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்ற ப்பட்டன.

    இதில் துணைத்தலைவர் கார்த்திக்,உறுப்பினர்கள் ஜெயந்தி,திவ்யா, தமிழ்செல்வி,தேவிமீனாள்,சுப்பிரமணியம்,ராமச் சந்திரன், சொக்கலிங்கம் உள்பட அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.மேலா ளர் ராஜேந்திரகுமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×