என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிரான்மலையில் பால்குட ஊர்வலம்
- சிவகங்பிகை அருகே பிரான்மலையில் பால்குட ஊர்வலம் நடந்தது.
- விழா ஏற்பாடுகளை பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவாச்சாரியார் செய்திருந்தார்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள பிரசித்தி பெற்ற பிரான்மலை வடுக பைரவர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் ஜெயந்தன் பூஜை நடத்தப்படுகிறது. இதையொட்டி பி.மதகுபட்டி ராமர் கோவிலில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் மலைக்கோவிலை நோக்கி புறப்பட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வந்த ஊர்வலம் மலைக்கோவிலை வந்தடைந்தது. அங்கு வடுக பைரவருக்கு பாலாபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திக்கு திருமஞ்சனம், பால், தயிர், தேன், சந்தனம், இளநீர், விபூதி உள்ளிட்ட வாசனாதி திரவியங்கள் மூலம் அபிஷேகங்கள் நடந்தன. விழா ஏற்பாடுகளை பரம்பரை ஸ்தானிகம் உமாபதி சிவாச்சாரியார் செய்திருந்தார்.
மேலும் மண்ணால் செய்யப்பட்ட நாய், பன்றி பதுமைகளை பக்தர்கள் தோளில் சுமந்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






