என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  இளைஞரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு
  X

  இளைஞரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திருப்பத்தூர் அருகே இளைஞரை தாக்கிய ஊராட்சி மன்ற தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
  • தலைமறைவாகி உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  திருப்பத்தூர்

  சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழக்காவனிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் ஆனந்தன். இவர் திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு அரசு சான்றிதழ் பெற வரும் நபர்களுக்கு சான்றிதழ் வாங்குவதற்கு உதவி செய்து வருகிறார்.

  இவர் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி உள்ளவருக்கு மின்சாரம் கொடுக்க கூடாது என மனு செய்து இருந்ததாக கூறப்படுகிறது.

  இதுதொடர்பாக இரணி யூர் அம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகு ஆறுமுகம், ஆனந்தனிடம் தகராறு செய்து திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது.

  இதுறித்து ஆனந்தன் கொடுத்த புகாரின்பேரில் கீழச்சிவல்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் விசாரணை நடத்தி கீழக்காவனிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் அழகு ஆறுமுகத்தின் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். தலைமறைவாகி உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  Next Story
  ×