search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை அமைக்க குடியிருப்புகளை அப்புறப்படுத்த கூடாது; கலெக்டரிடம், பொதுமக்கள் மனு
    X

    கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

    சாலை அமைக்க குடியிருப்புகளை அப்புறப்படுத்த கூடாது; கலெக்டரிடம், பொதுமக்கள் மனு

    • நாங்கள் குடியிருக்கும் இடத்தை எங்களிடமே திருப்பி வழங்க வேண்டும் .
    • வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

    கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை தாங்கினார்.

    மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    திருவையாறு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த பொதுமக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    திருவையாறு பேரூராட்சி இரண்டாவது வார்டில் உள்ள கஸ்தூரிபாய் நகரில் சுமார் 16 குடும்பங்கள் கடந்த 70 வருடங்களாக வசித்து வருகிறோம். நாங்கள் குடியிருந்து வரும் வீட்டிற்கும் முறையாக அரசிற்கு வரி செலுத்தி வருகிறோம்.

    நாங்கள் குடியிருக்கும் தெருவிற்கு சாலை வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகள் தமிழக அரசால் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் எங்களின் பல குடும்பங்களுக்கு பசுமை வீடுகளையும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு இலவச வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.

    நாங்கள் அனைவரும் விவசாய தின கூலி .

    இந்நிலையில் திருவையாறு சுற்றுவட்ட சாலை அமைப்பதற்கு எங்களுக்கு சொந்தமான இடத்தில் இருந்து எங்களை அப்புறப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு சாலை விரிவாக்கம் செய்து வருகிறது.

    நாங்கள் குடியிருக்கும் தெருவில் எங்களின் வீடுகளுக்கு அருகாமையில் சுற்றுவட்ட பாதை அமைக்க நெடுஞ்சாலைத்துறை அரசு அதிகாரிகள் அளவீடு செய்துள்ளனர்.

    இதனால் எங்களில் சுமார் 15 குடும்ப ங்களின் வீடுகள் மற்றும் எங்கள் கிராமத்தில் உள்ள தில்லை காளியம்மன் கோவிலும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. எனவே நாங்கள் குடியிருக்கும் இடத்தை எங்களிடமே திருப்பி வழங்க வேண்டும் .

    எங்களது இடத்தின் அருகே ஏராளமான காலியிடங்கள் உள்ளது.

    இந்த இடத்தில் நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்ய சாலை அமைத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×