என் மலர்
உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவிலில் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு -வாலிபர் கைது
- சண்முக ராஜின் உறவுக்கார பெண்ணிடம் முத்துக்குட்டி பேசியதாக கூறப்படுகிறது.
- வாக்குவாதம் முற்றவே 2 பேரும் சேர்ந்து முத்துக்குட்டியை அடித்து உதைத்து அவருடைய மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்திநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் சின்ன ஈஸ்வரன். இவரது மகன் முத்துகுட்டி (வயது 30). அதே பகுதியில் 1-வது தெருவை சேர்ந்தவர்கள் சண்முகராஜ்(27), மகேஷ்(34). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.
இந்நிலையில் சண்முக ராஜின் உறவுக்கார பெண்ணி டம் முத்துக்குட்டி பேசியதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று சங்கரன்கோவில் பொட்டல் பகுதியில் முத்துக்குட்டி நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த சண்முகராஜ் மற்றும் மகேஷ் ஆகியோர் தங்களது உறவுக்கார பெண்ணிடம் பேசக்கூடாது என்று கூறி வாக்குவாதம் செய்துள்ளனர்.
வாக்குவாதம் முற்றவே 2 பேரும் சேர்ந்து முத்துக்குட்டியை அடித்து உதைத்து அவருடைய மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகராஜை கைது செய்தனர். தப்பி ஓடிய மகேசை தேடி வருகின்றனர்.






