search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை
    X

    கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஒத்திகை

    • பாதுகாப்பு ஒத்திகையில் 213 பேர் பங்கேற்றனர்.
    • ஒத்திகையில் விமானத்துக்கு பதில் பஸ் பயன்படுத்தப்பட்டது.

    கோவை,

    கோவை பீளமேடு விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், ஷார்ஜா ஆகிய வெளிநாடுகளுக்கும், உள்நாட்டின் முக்கிய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மத்திய நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் விமான நிலையத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடு தொடர்பான ஒத்திகை நிகழ்வு நேற்று மாலை நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, விமான நிலைய இயக்குநர் செந்தில் வளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஒத்திகையில் விமானத்துக்கு பதில் பஸ் பயன்படுத்தப்பட்டது. பயணிகள் வேடத்தில் வந்த 4 தீவிரவாதிகள் பயணிகளை பிடித்து விமானத்தை கடத்த முயற்சிப்பது போலவும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் மற்றும் சிறப்புப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் துப்பாக்கியுடன் தீவிரவாதிகளை பிடிக்க முயற்சிப்பது போலவும், மீட்புப் படையைச் சேர்ந்த காவலர் ஒருவர் மருத்துவர் போல சென்று தீவிரவாதிகள் நால்வரையும் பிடித்து பயணிகளை மீட்பது போலவும் ஒத்திகை நடத்தப்பட்டது.

    இந்த ஒத்திகையில் மத்திய தொழில் பாதுகாப்புப்படையினர் 135 பேர், விமான நிலையத்தைச் சேர்ந்த 15 பணியாளர்கள், தீயணைப்பாளர்கள் 4 பேர், காவலர்கள் 16 பேர், தேசிய பாதுகாப்புப் படையினர், விமான நிலைய ஊழியர்கள் என மொத்தம் 213 பேர் பங்கேற்றனர். 40 நிமிடங்கள் நடைபெற்ற ஒத்திகையை விமான போக்குவரத்து பாதுகாப்பு துணை இயக்குநர் வினு சச்சின் தேவ் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

    Next Story
    ×