என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

ரூ.1 லட்சம் 'லோன்' தருவதாக வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி அனுப்பி வாலிபரிடம் ரூ.40 ஆயிரம் மோசடி- சைபர் கிரைம் போலீசார் விசாரணை

- நெல்லை மாவட்டத்திலும் ஒரு வாலிபர் லோன் ஆசையில் ரூ.40 ஆயிரத்தை இழந்துள்ளார்.
- அந்த வாலிபர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.40 ஆயிரம் அனுப்பி உள்ளார்.
நெல்லை:
சமீபகாலமாக ஆன்ட்ராய்டு செல்போன்களில் உள்ள சில செயலிகள் (ஆப்) மூலம் கடன் வழங்குவதாக ஆசை காட்டி மோசடி நடைபெறும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
வாட்ஸ் அப்பில் குறுஞ்செய்தி
அந்த வகையில் நெல்லை மாவட்டத்திலும் ஒரு வாலிபர் லோன் ஆசையில் ரூ.40 ஆயிரத்தை இழந்துள்ளார். இது பற்றிய விபரம் வருமாறு:-
வள்ளியூர் பகுதியை சேர்ந்த 27 வயது வாலிபர் ஒருவருக்கு அவரது செல்போன் வாட்ஸ் அப்பில் ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது.
ரூ.40 ஆயிரம் முன்பணம்
அதை 'கிளிக்' செய்ததும் ஒரு செயலிக்கு சென்றது. அதில் உங்களுக்கு ரூ.1 லட்சம் லோன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ரூ.40 ஆயிரம் முன் பணம் அனுப்பவும் என தகவல் காட்டியது. இதை நம்பிய அந்த வாலிபர் குறிப்பிட்ட வங்கி கணக்கிற்கு ரூ.40 ஆயிரம் அனுப்பி உள்ளார். ஆனால் அவருக்கு லோன் தொகை எதுவும் வரவில்லை.
இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செல்போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அப்போது தான் அவர் ஏமாற்றப்பட்டதை அறிந்தார்.
சைபர் கிரைம் போலீசார் விசாரணை
இதுதொடர்பாக அந்த வாலிபர் நெல்லை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் இச்சம்பவத்தில் வடமாநில வாலிபர்கள் கைவரிசை காட்டியது தெரிய வந்துள்ளது. மோசடி செய்த வங்கி கணக்கை முடக்கி உள்ளதாகவும், விரைவில் அந்த கணக்கில் இருந்து பணத்தை மீட்டு மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்வோம் என போலீசார் தெரிவித்தனர்.