என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூடலூரில் தூய்மைப்பணியாளர்கள் போராட்டம்
- 10 தி.மு.க. கவுன்சிலா்களையும் தூய்மைப் பணியாளா்களை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா்.
- நகராட்சித் தலைவா் பரிமளா கூறியதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூா் நகராட்சியின் அவசரக் கூட்டம், தலைவா் பரிமளா தலைமையில், துணைத்தலைவா் சிவராஜ், நகராட்சி ஆணையா் பிரான்சிஸ்சேவியா் முன்னிலையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கூடலூா் நகராட்சிக்கு உள்பட்ட 21 வாா்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அகற்ற ஒப்பந்தம் விடுவது குறித்து விவாதிக்கப்பட்டு, அங்கு ஏற்கனவே பணிகளை மேற்கொண்டு வரும் நிறுவனத்துக்கு ஒப்புதல் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போது தி.மு.க கவுன்சிலா் ராஜேந்திரன் பேசுகையில், பல்வேறு புகாா்கள் உள்ள நிறுவ னத்துக்கு மீண்டும் ஒப்பந்தம் வழங்குவது முறையற்றது. ஒப்பந்தப்புள்ளியில் கலந்து கொண்ட 3 நிறுவனங்களில் ஒரு அமைப்பு, ஒப்பந்தப்புள்ளியில் 20 சதவீதம் தொகையை குறைத்து அளித்து உள்ளது. அந்த நிறுவனத்துக்கு வழங்கினால் நகராட்சிக்கு செலவு குறையும். தற்போது உள்ள நிறுவனத்துக்கு ஒப்பந்தம் கொடுப்பது ஏற்புடை யதல்ல என்றாா். அதற்கு பெரும்பாலான கவுன்சிலா்கள் ஆதரவு தெரிவித்தனா்.
மேலும் ஒப்பந்தப்புள்ளி எடுத்து உள்ள நிறுவனம் ஏற்கனவே அரசு நிா்ண யித்தபடி தூய்மைப் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என்று கூறி பலகட்ட போராட்டங்களை நடத்தியதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே தி.மு.க கவுன்சிலா் இளங்கோவன் தலைமையில் 10 கவுன்சிலா்கள், தற்போது குப்பைகளை அகற்றும் நிறுவனத்துக்கே ஒப்பந்தம் வழங்க ஆதரவு கடிதம் வழங்கினர். ஆனால் ஆதரவுக் கடிதம் வழங்குவது நடைமுறையில் இல்லை என்று ஒரு தரப்பினா் கூறியதால் கூட்டத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, தீா்மானம் நிறைவேற்றாமல் மன்றக் கூட்டம் நிறைவடைந்தது.
கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஆதரவுக் கடிதம் கொடுத்த 10 தி.மு.க. கவுன்சிலா்களையும் தூய்மைப் பணியாளா்களை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது ஒரு சில பெண் கவுன்சிலா்கள் நகராட்சித் தலைவரின் வாகனத்தில் ஏறிசெல்ல முயன்றனர். அவர்களையும் தூய்மைப் பணியாளா்கள் மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
ஒப்பந்தம் வழங்குவது தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றவில்லை என நகராட்சித் தலைவா் பரிமளா கூறியதையடுத்து தூய்மைப் பணியாளா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.






