என் மலர்
உள்ளூர் செய்திகள்

ரெயில்களில் டிக்கெட் இல்லாமல் பயணித்த 16 ஆயிரத்து 346 பேருக்கு ரூ.1.09 கோடி அபராதம்
- ரெயில்களில் டிக்கெட் இன்றியும் முறைகேடாகவும் பயணம் செய்யும் நபர்களை டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள்.
- சேலம் கோட்டத்தில் கோட்ட மேலாளர் பங்கஜ்கு மார் சின்கா உத்தரவின் பேரில் முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சேலம்:
நாடு முழுவதும் ரெயில்களில் டிக்கெட் இன்றியும் முறைகேடாகவும் பயணம் செய்யும் நபர்களை டிக்கெட் பரிசோதகர்கள் பிடித்து அபராதம் விதித்து வருகிறார்கள். அந்த வகையில் சேலம் கோட்டத்தில் கோட்ட மேலாளர் பங்கஜ்கு மார் சின்கா உத்தரவின் பேரில் முதுநிலை வணிக மேலாளர் பூபதிராஜா தலைமையிலான குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
3 ஆயிரம் சோதனை
அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் சேலம் கோட்ட பகுதிகளில் இயங்கும் ரெயில்களில் 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட சோத னைகள் நடத்தப்பட்டன. இதில் டிக்கெட் இன்றி பயணித்த 10 ஆயிரத்து 415 பேருக்கு ரூ. 78.90 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
அதே போல முன்பதி வில்லா டிக்கெட் எடுத்து கொண்டு முன் பதிவு பெட்டியிலும், 2-ம் வகுப்பு முன் பதிவு டிக்கெட் எடுத்து கொண்டு ஏ.சி. பெட்டி களிலும் முறைகேடாக பயணித்த 5 ஆயிரத்து 890 பேரிடம் இருந்து ரூ.30 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
இது தவிர ரெயில்களில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக லக்கேஜ் எடுத்து சென்றதாக 41 பயணிகளுக்கு ரூ.26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ரூ.1 கோடியே 9 லட்சம்
அதன்படி கடந்த மாதம் மட்டும் மொத்தம் 16 ஆயி ரத்து 346 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 877 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சோதனை நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.






