என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலத்தில் பெண் உள்பட 2 பேரிடம் ரூ.21 லட்சம் நூதன மோசடி
- வித்யா (36). இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த 31-ந் தேதி ஆன்லைன் டாஸ்க் செய்யச் சொல்லி குறுந்தகவல் வந்தது.
- வித்யா அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்த லிங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பணம் செலுத்தி பதில் அளித்துக் கொண்டு இருந்தார்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள கணபதிபாளையம் சாமுண்டி நகர் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ். இவரது மனைவி வித்யா (36).
இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த 31-ந் தேதி ஆன்லைன் டாஸ்க் செய்யச் சொல்லி குறுந்தகவல் வந்தது.
ரூ.11 லட்சம்
அதைத்தொடர்ந்து வித்யா அந்த குறுந்தகவலில் குறிப்பிடப்பட்டு இருந்த லிங்கில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பணம் செலுத்தி பதில் அளித்துக் கொண்டு இருந்தார். இப்படியாக ரூ.11 லட்சத்து 14 ஆயிரத்து 143 கட்டி டாஸ்கை முடித்துள்ளார்.
இந்த நிலையில் அந்த லிங்கில் கூறியபடி வித்யாவின் வங்கி கணக்குக்கு மீண்டும் பணம் வராததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வித்யா இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தனியார் வங்கி
இதேபோல் சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரி ரோடு 6-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன்(41).
இவரது செல்போன் எண்ணிற்கு கடந்த 31-ந் தேதி பேசிய மர்ம நபர் தனியார் வங்கியில் இருந்து பேசுவதாக கூறியுள்ளார்.
மேலும் அவர் அனுப்பிய செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்ய சொல்லி இருக்கிறார்.
இதை உண்மை என்று நம்பிய கார்த்திகேயன் மேற்கண்ட செயலியை பதிவிறக்கம் செய்ததும் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் 2 தவணைகளாக எடுக்கப்பட்டது.
இதுகுறித்த குறுந்தகவலை பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திகேயன் சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.






