என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூதாட்டியிடம் ரூ.85 ஆயிரம் பறித்த16 வயது சிறுவன் சிக்கினான்
- ரங்கநாயகி (60). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி சிவனார் தெரு பகுதியில் நடந்து சென்றார்.
- அந்த வழியாக வந்த 2 பேர் அவர் வைத்திருந்த ரூ.85 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர்.
சேலம்:
சேலம் கருங்கல்பட்டியை சேர்ந்தவர் ரங்கநாயகி (60). இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி சிவனார் தெரு பகுதியில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த 2 பேர் அவர் வைத்திருந்த ரூ.85 ஆயிரம் பணம் மற்றும் செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் செவ்வாய்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி இதில் தொடர்புடைய குட்டி புலி என்பவரை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 16 வயது சிறுவனை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு அந்த சிறுவன் போலீசாரிடம் சிக்கினான். அவனை அழைத்து வந்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சிறுவன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story






