என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  உடன்குடி யூனியனில் ரூ.31 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் - கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
  X

  ஆதியாக்குறிச்சி ஊராட்சி மன்ற புதிய கட்டிடத்தை கனிமொழி எம்.பி. திறந்து வைத்தபோது எடுத்தபடம். அருகில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் மற்றும் பலர் உள்ளனர்.


  உடன்குடி யூனியனில் ரூ.31 லட்சத்தில் வளர்ச்சி பணிகள் - கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • செம்புலிங்க புரத்தில் ரூ.11.10 லட்சம் மதிப்பில் புதிதாக அங்கன் வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
  • நிகழ்ச்சிக்குஅமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

  உடன்குடி:

  உடன்குடி யூனியன் வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட செம்புலிங்க புரத்தில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11.10 லட்சம் மதிப்பில் யூனியன் தொடக்கப்பள்ளி வளாகத்தில் புதிதாக அங்கன் வாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

  ஆதியாக்குறிச்சி ஊராட்சி தீதத்தாபுரத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.19.91 லட்சம் மதிப்பில் ஊராட்சி அலுவலகக் கட்டிடமும் கட்டப்பட்டுள்ளது.

  இப்பணிகள் நிறைவு பெற்றதையொட்டி தொடக்க விழா நடந்தது.இந்நிகழ்ச்சிக்கு தமிழக மீன்வளம், மீனவர் நலம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சிதலைவர் பால சரஸ்வதி, ஆதியா குறிச்சி ஊராட்சிதலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்துவைத்து பொது மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.இதில் மாநில தி.மு.க. மாணவரணி துணை செயலாளர் உமரிசங்கர், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ, உடன்குடி பேரூராட்சிதுணைத் தலைவர் மால்ராஜேஷ், உடன்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, பழனிச்சாமி, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து ஊராட்சி தலைவர் பால முருகன், மாவட்ட சார்பு அணி அமைப்பாளர்கள் ராமஜெயம்,

  அருணாசலம், மகா விஷ்ணு, மாவட்டப் பிரதிநிதிகள் ரவிராஜா, மதன்ராஜ், காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் சிவசுப்பிரமணியன், முன்னாள் மாவட்டக் காங்கிரஸ், பொருளாளர் நடராஜன், ஆதியாகுறிச்சி ஊராட்சி துணைத் தலைவர் பவுல், ஊராட்சி, செயலர் (பொறுப்பு) ரசூல் திமுகவைச் சேர்ந்த மணல் கணேசன். பாய்ஸ், அஜய் உடன்குடி பேரூராட்சியின் கவுன்சிலர்கள் முன்னாள் கவுன்சிலர்கள், பேரூ ராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

  Next Story
  ×