search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    ஹெல்மெட் அணிந்து வந்தவருக்கு டீசர்ட் வழங்கப்பட்டது.

    சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது போன்ற நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு.
    • ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு பிரச்சார கையேடு வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    தேசிய பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ஓ.என்.ஜி.சி மற்றும் திருவாரூர் காவல்துறை ஆகியவை இணைந்து திருவாரூர் பஸ் நிலையம் அருகில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் சாலை விதிகள் குறித்து பேசினார்.

    தொடர்ந்து, வாகன ஓட்டிகளிடம் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்தும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது, இருசக்கர வாகனத்தில் 2 நபருக்கு மேல் செல்லக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது போன்ற நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    தொடர்ந்து, ஹெல்மெட் அணிந்து வந்த 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஓ.என்.ஜி.சி சார்பில் டீசர்ட் வழங்கப்பட்டது.

    ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு பிரச்சார கையேடு வழங்கப்பட்டது.

    இதில் திருவாரூர் நகர போக்குவரத்து இன்ஸ்பெ க்டர் ஈஸ்வரமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன், திருவாரூர் நகர சப்இன்ஸ்பெக்டர் தியாகராஜன், ஓ.என்.ஜி.சி பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்பு தலைவர் முதன்மை பொது மேலாளர் சிவசங்கர், துணை பொதுமேலாளர்கள் தியாகராஜன், வேனு கோபால், சமூக பொறுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×