search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வீரபாண்டியில் தாழ்வாக செல்லும் மின்வயரால் விபத்து அபாயம்
    X

     தாழ்வாக செல்லும் மின்வயரை படத்தில் காணலாம்

    வீரபாண்டியில் தாழ்வாக செல்லும் மின்வயரால் விபத்து அபாயம்

    • மின்சார வயர் கையில் தொடும் அளவிற்கு செல்லுகிறது.
    • மின்சார வயர் வாகனங்களில் சிக்கினால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம் உள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூர் வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்திலிருந்து இடது புறமாக செல்லும் சாலைபோக்குவரத்து நிறைந்த சாலையாகும். இந்த சாலையில் ஏ.எஸ்.என். மருத்துவமனை அருகே சாலையை கடந்து செல்லும் மின்சார வயர் கையில் தொடும் அளவிற்கு செல்லுகிறது.

    இந்த சாலையில் கனரக வாகனங்கள் அதிகமாக செல்லும் சாலையாகும். இந்த மின்சார வயர் வாகனங்களில் சிக்கினால் பெரிய விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம்உள்ளது. இது குறித்து வீரபாண்டி மின்வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே உடனே நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×