என் மலர்
உள்ளூர் செய்திகள்

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்களை படத்தில் காணலாம்.
பஞ்சப்படி உயர்வு வழங்க கோரி ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
- வண்ணார்பேட்டையில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.
- ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ படி ரூ.300 வழங்க வேண்டும்.
நெல்லை:
தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஓய்வு பெற்றோர் நல சங்கம் நெல்லை கிளை சார்பில் வண்ணார்பேட்டையில் உள்ள தாமிரபரணி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு காத்திருப்பு போராட்டம் நடை பெற்றது.
போராட்டத்திற்கு மண்டல தலைவர் தாணு மூர்த்தி தலைமை தாங்கி னார். நிர்வாகிகள் ராமையா பாண்டியன், செல்வராஜ், ராஜன், கிருபாகரன் ஆகி யோர் முன்னிலை வகித்த னர்.
ஓய்வு பெற்றோர் ஒருங் கிணைப்பு குழுவின் நெல்லை மாவட்ட தலைவர் கோமதிநாயகம் தொடக்க உரையாற்றினார். முத்து கிருஷ்ணன், வெங்கடாசலம், பழனி ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். காமராஜ் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
ஓய்வு பெற்றவர்களுக்கு மருத்துவ படி ரூ.300 வழங்க வேண்டும், வாரிசு பணி யிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
2022-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். குடும்ப ஓய்வூதி யர்கள் 90 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களுக்கு பஞ்சப்படி உயர்வு வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.






