என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லை வண்ணார்பேட்டையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
    X

    ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

    நெல்லை வண்ணார்பேட்டையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    • அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    நெல்லை:

    தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் நெல்லை மாவட்ட நிர்வாகிகள் சார்பில் இன்று வண்ணார்பேட்டையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நாதன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் முத்து மாலை முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் லோகிதாசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும். 80 வயதின் தொடக்கத்திலேயே கூடுதல் ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை உடனே செயல்படுத்த வேண்டும். சத்துணவு ஓய்வூதியர்களுக்கு தற்போதைய ஓய்வூதியம் ரூ.2,000 என்பதை ரூ. 7,850 ஆக உயர்த்திட வேண்டும். மருத்துவப்படி ரூ. 300, ஈமச்சடங்கு ரூ.25 ஆயிரம் மற்றும் குடும்ப பாதுகாப்பு நிதி ரூ.3 லட்சம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    சங்கத்தின் முன்னாள் மாநில துணைத் தலை வர் குமார வேல், மாநில அமைப்பாளர் ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட பொருளாளர் ரத்தினவேல் நன்றி கூறினார்.

    Next Story
    ×