search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை புது ஆற்றில் தத்தளித்த மூதாட்டி மீட்பு
    X

    தத்தளித்த மூதாட்டியை மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    தஞ்சை புது ஆற்றில் தத்தளித்த மூதாட்டி மீட்பு

    • மன வேதனை அடைந்த தங்கம் பெரிய கோவில் அருகே உள்ள புது ஆற்றில் திடீரென இறங்கினார்.
    • அப்போது மேலே சென்ற ஒரு கயிறை பிடித்துக் கொண்டு தவித்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மானோஜி பட்டியை சேர்ந்தவர் தங்கம்( வயது 60) . இவரை இன்று இவரது மகன் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனை அடைந்த தங்கம் பெரிய கோவில் அருகே உள்ள புது ஆற்றில் திடீரென இறங்கினார். சிறிது நேரத்தில் அவர் தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்டார். அப்போது மேலே சென்ற ஒரு கயிறை பிடித்துக் கொண்டு தவித்தார். வெளியே வர முடியாமல் தவித்தத பெரிய கோவில் வியாபாரிகள் நல சங்க தலைவர் ஜெயக்குமார் பார்த்தார். உடனே அவர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையம் மற்றும் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன் பேரில் தீயணைப்பு துறை அதிகாரி பொய்யாமொழி, விஜய் , பாபு , சத்யராஜ், பாலசுப்பிரமணியம் , அண்ணாதுரை மற்றும் மேற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா, சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    இதையடுத்து தீயணைப்பு துறை அதிகாரிகள் ஆற்றுக்குள் குதித்து மூதாட்டி தங்கத்தை பத்திரமாக மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்க அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    உடனடியாக மூதாட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    Next Story
    ×