search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மின்னல் தாக்கி பலியான விளாத்திகுளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி
    X

    மின்னல் தாக்கி பலியான விளாத்திகுளம் பெண்ணின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி

    • அமுதமலர் நேற்று முன்தினம் மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    • அமுதமலர் குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறி, ரூ.4 லட்சத்திற்கான காசோலை மற்றும் சொந்த நிதியும் வழங்கினார்.

    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே உள்ள கே.துரைச்சாமிபுரம் கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி என்பவரின் மனைவி அமுதமலர் (வயது 35). இவர் நேற்று முன்தினம் விவசாய பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பி கொண்டிருக்கும்போது திடீரென மின்னல் தாக்கியதில் அமுதமலர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் மின்னல் தாக்கி உயிரிழந்த அமுதமலர் குடும்பத்தினருக்கு அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறி, மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சத்திற்கான காசோலை மற்றும் சொந்த நிதியும் வழங்கினார். அப்போது மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ., கோவில்பட்டி ஆர்.டி.ஓ. ஜோன் கிறிஸ்டிபாய், தாசில்தார் ராமகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

    அப்போது, மின்னல் தாக்கி உயிரிழந்த அமுதமலரின் உறவினர்களிடம் குழந்தைகளை பார்த்து கொள்ளும்படி அமைச்சர் கீதாஜீவன் ஆறுதல் கூறினார்.

    அப்போது புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிக்குமார், வெங்கடாசலம், புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன் ராஜ், தூத்துக்குடி வடக்கு மாவட்ட முன்னாள் இளைஞர் அணி துணை அமைப்பாளர் இமானுவேல், மாவட்ட பிரதிநிதி இராமலிங்கம், ஒன்றிய பிரதிநிதி செல்வகுமார், ஒன்றிய மகளிர் அணி அமைப்பாளர் மாரீஸ்வரி, புதூர் வாசுதேவன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×