search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய கால்வாய் அமைக்கும் பணிக்கு நிதி வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்- தென்காசி கலெக்டரிடம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மனு
    X

    தென்காசி கலெக்டர் ஆகாஷிடம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு வழங்கிய போது எடுத்த படம்.


    புதிய கால்வாய் அமைக்கும் பணிக்கு நிதி வழங்க பரிந்துரை செய்ய வேண்டும்- தென்காசி கலெக்டரிடம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மனு

    • மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., தென்காசி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.
    • திட்டத்தின் மூலம் 532.55 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.

    தென்காசி:

    ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன், தென்காசி மாவட்ட கலெக்டரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வீராணம் பெரிய குளத்திலிருந்து காசிக்குவித்தான் குளத்திற்கு தண்ணீர் செல்லும் வழங்கு கால்வாயில் இருந்து காவலாகுறிச்சி பெரியகுளம் மற்றும் அதன் கீழ் உள்ள சிறு குளங்களுக்கு தண்ணீர் வழங்க புதிய கால்வாய் அமைக்கும் பணிக்காக பொதுப்பணித்துறை மூலம் ஆய்வு பணிகள் நடைபெற்று, வடிவமைப்பு கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டு, திட்டத்தின் உத்தேச மதிப்பீடு ரூ.12 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டு, நிதி ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்பட்டு, தற்போது இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது என்று நான் அறிகிறேன்.

    நிதி வழங்க...

    மேலும் கைவிடப்பட்ட இத்திட்டத்தின் மூலம் காவலாகுறிச்சி வெண்ணிலங்கபுரம், மருதம்புதூர், கடங்கநேரி, வெங்கடேஸ்வரபுரம், காடுவெட்டி, வடக்கு காவலாகுறிச்சி, கே.நவநீதகிருஷ்ணபுரம், நாச்சியார்புரம், ஏந்தலூர் ஆகிய கிராமங்களில் 532.55 ஏக்கர் பாசன நிலங்கள் பாசன வசதி பெறும்.

    மேலும் மேற்கண்ட கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதனால் வானம் பார்த்த பூமியாக உள்ள இப்பகுதி விவசாய விளைநிலமாக மாறும். தற்போது மானாவாரி பகுதியாக உள்ள இந்த பகுதி மேற்கண்ட கால்வாய் திட்டம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில் ஆண்டிற்கு ஒருபோகம் விளையும் நெல் மகசூல் இரண்டு போகமாக விளைந்து விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படுவது மட்டுமல்லாமல் இப்பகுதியில் ஆடு, மாடு போன்ற கால்நடைகளை நம்பி வாழ்க்கையை நகர்த்தும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரமும் உயரும். மேலும் காவலாகுறிச்சி, கடங்கநேரி, காடுவெட்டி, வடக்கு காவலா குறிச்சி, கீழவீராணம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்.

    எனவே மிக நீண்ட கால இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்து திட்டத்திற்கு தேவையான நிதி ஒப்புதல் அளிப்பதற்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×