என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    தக்கோலத்தில் ரூ.66 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி செயலாளர் உள்பட 3 பேரை ஜெயிலில் அடைத்தனர்.
    வேலூர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் விவசாயிகளுக்கு பயிர் கடன், நகைக்கடன் போன்ற பல்வேறு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 2015-2018-ம் ஆண்டு காலக்கட்டத்தில் அந்த கூட்டுறவு வங்கியில் பணியாற்றி வந்த செயலாளர் விசுவநாதன் (வயது 60), உதவி செயலாளர் சீனிவாசன் (61), எழுத்தர் கஜேந்திரன் (60) ஆகிய விவசாயிகள் செலுத்திய வங்கி கடனை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்காமலும், தனிநபர் வங்கி கடன், நிரந்தர வைப்பு தொகை ஆகிய வங்கி கணக்குகளில் முறைகேடு செய்யப்பட்டு உள்ளதாக புகார் எழுந்தது.

    அதன்பேரில் கூட்டுறவு துறை அதிகாரிகள் வங்கியில் தணிக்கை செய்தனர். இதில் 66 லட்சத்து 54 ஆயிரத்து 754 ரூபாய் முறைகேடு செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரும் சஸ்பெண்டு செய்யபட்டனர்.

    இந்நிலையில் முறைகேடு செய்த 3 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளும்படி ராணிப்பேட்டை மாவட்ட கூட்டுறவு துணை பதிவாளர் சந்திரன் வேலூர் மாவட்ட வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜிலட்சுமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.அவர்கள் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    வாலாஜா அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்ட வெல்டிங் தொழிலாளி சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
    வாலாஜா:

    வாலாஜா அடுத்த விசி.மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானவேல்(27). வெல்டிங் தொழிலாளி. 

    இவர் வாலாஜா அடுத்த ரபிக் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு பகுதியில் நேற்று முன்தினம் பாதி எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார். 

    இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    உடலை வாங்க அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு நேற்று மாலை வந்தனர். அப்போது அவர்கள் மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    ஞானவேல் சாவில் மர்மம் இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட அவர் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குமாறு கோரிக்கை விடுத்தனர். 

    இதுகுறித்து தகவலறிந்த வாலாஜா போலீஸ் இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

    மேலும் சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பிரேத பரிசோதனை செய்த பின்னர் ஞானவேல் உடலை பெற்றுச் சென்றனர். 

    திடீர் சாலை மறியலால் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    ராணிப்பேட்டையில் ரூ.12 கோடியில் கட்டப்பட்டு வரும் புதிய எஸ்.பி. அலுவலகத்தை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
    ராணிப்பேட்டை:

    வேலூரில் இருந்து பிரிக்கப்பட்ட ராணிப்பேட்டை புதிய மாவட்டமாக உதயமானது.

    ராணிப்பேட்டை பாரதி நகா¤ல் புதிய மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ரூ.12 கோடியே 2.51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாவட்ட புதிய எஸ்பி அலுவலக கட்டிடத்தை நேற்று இரவு 9 மணி அளவில் டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர் ஒப்பந்ததாரர் ஆனந்தகுமார் என்பவா¤டம் புதிய எஸ்பி அலுவலக கட்டிடம் எத்தனை ஏக்கர் பரப்பளவில் மேலும் எவ்வளவு மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. அலுவலகத்தில் எந்தெந்த வேலைப்பாடுகள் என்னென்ன பணிகள் நடந்து வருகின்றன என்பது குறித்து கேட்டறிந்தார். 

    இதற்கு ஒப்பந்ததாரர் 5.11 ஏக்கர் நிலப் பரப்பளவில் உள்ள நிலத்தில் புதிய எஸ்பி அலுவலக கட்டிடம் 31 சென்டில் ரூ.12 கோடியே 2.51 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. 

    மேலும் பல்வேறு து£¤த பணிகள் நடந்து வருவது குறித்தும் தொ¤வித்தார்.மேலும் புதிய எஸ்பி அலுவலக கட்டிடம் ஒப்பந்த காலம் 11 மாதங்கள் எனவும் பணி துவங்கிய நாள் 7-7-2021 பணி முடிவுறும் நாள் 6-6-2022 என கூறப்படுகிறது. 

    மேலும் மூன்று மாதங்கள் கூடுதலாக அவகாசம் கேட்கப்பட்டுள்ளது என ஒப்பந்ததாரர் தொ¤வித்தார். 

    இதனைத் தொடர்ந்து டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.இந்த ஆய்வின் போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன், வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபாசத்யன், ஏடிஎஸ்பி முத்துகருப்பன், டிஎஸ்பி பிரபு, இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    ஆற்காடு பஸ் நிலையத்தில் நகராட்சி தலைவர் திடீரென ஆய்வு செய்தார்.
    ஆற்காடு:

    ஆற்காடு பஸ் நிலையத்தில் நகரமன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் ஆய்வு செய்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகர மன்றத் தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன், ஆணையாளர் சதீஷ்குமார், பொறியாளர் கணேசன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் ஆற்காடு நகரில் உள்ள பஸ் நிலையத்தை மேம்படுத்துவது குறித்து கள ஆய்வு செய்தார்.

    அப்போது பஸ் நிலையத்தில் சிதலமடைந்து உள்ள பகுதிகள் மேற்கூரை ஆகியவற்றை பார்வையிட்டார் மேலும் பராமரிப்பின்றி சேதமடைந்து உள்ள கட்டிடத்தை சீர் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பின்னர், அம்மா உணவகத்தை பார்வையிட்டு அங்கே விற்பனை செய்யப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

    உணவகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் கணினி ரசீது வழங்க வேண்டும் என்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். பஸ் நிலையம் அருகில் உள்ள கண்ணன் பூங்கா லேபர் தெரு பகுதியில் உள்ள பொது கழிப்பறையில் பார்வையிட்டார்.
    அந்தமான் நிக்கோபார் தீவுக்கு அரக்கோணம் தேசிய மீட்புபடையினர் விரைந்தனர்.
    நெமிலி:

    அரக்கோணத்தில் இருந்து தேசிய மேடைப் படை தளத்தில் இருந்து அந்தமான் நிக்கோபார் தீவுகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது இது புயலாக மாற வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம், புயல் மற்றும் கன மழைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    இதன் காரணமாக அந்தமான் நிக்கோபார் தீவுகளின் நிர்வாகம் கேட்டுக் கொண்டதின் பேரில் அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் 130 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் அதிநவீன மீட்புப் கருவிகளுடன் அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தளத்தில் இருந்து துணை கமாண்டன்ட்  வைத்தியலிங்கம் தலைமையில் விமானப்படை விமானம் மூலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு விரைந்தனர்.
    பாணாவரம் அருகே பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த மேல் வீராணம் பகுதியில் செயல்பட்டுவருகிறது. 

    அரசு உயர்நிலைப் பள்ளியில் போதிய ஆசிரியர் இல்லாததை கண்டித்தும், பாதுகாப்பான வகுப்பறைகள் இல்லாததை கண்டித்தும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பை புறக்கணித்தனர். 

    பின்னர் பாணாவரம் காவேரிப்பாக்கம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

    பாணாவரம் போலீசார் மாணவர்களிடம்  பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்தனர்.

    மாணவர்களின் மறியலால் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
    ஆற்காடு அருகே வேலூர் வாலிபர் மர்ம சாவு குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    வேலூர் மாவட்டம், ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சுலைமான் (வயது 20). இவர் ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பகுதியிலுள்ள தனது அண்ணன் வீட்டில் தங்கி இருந்து இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார்.

    இவர் தனது உறவினர்களிடம் வேலூருக்கு சென்று வருவதாக நேற்று கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில் சென்னை பெங்களூர் சர்வீஸ் சாலையின் அருகே நிலத்தில் வேலி கல்லில் துணியால் கழுத்தில் சுற்றி இறந்த நிலையில் சுலைமான் பிணமாக கிடந்தார். 

    இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சுலைமான் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து சுலைமானை யாராவது அடித்து கொலை செய்து இங்கு வந்து வீசிசென்றார்களா அல்லது  தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை அருகே டிரைலர் லாரி மோதி புகைப்பட நிபுணர் பரிதாபமாக இறந்தார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் குமணந்தாங்கல் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் முனுசாமி(வயது50) . புகைப்பட நிபுணர். 

    முனுசாமி நேற்று மாலை குமணந்தாங்கல் கிராமத்தில் இருந்து பைக்கில் ராணிப்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்தார். 

    அப்போது லாலாப்பேட்டை பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பின்னால் வந்த டிரைலர் லாரி இவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. 

    இதில் முனுசாமிக்கு படுகாயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கம்பக்கத்தினர் உதவியுடன் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். 

    இதுகுறித்து வாலாஜா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிபேட்டை அருகே 16 வயதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியை சேர்ந்தவர் முகமது பாஷா(வயது 30) இவர் அங்குள்ள ஒரு தனியார் ஓட்டலில் வேலை செய்து வருகிறார். 

    இவர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியிடம் அடிக்கடி பாலியல் பலாத்காரத்தில் ஈட்டுபட்டுள்ளார். இதனால்  சிறுமி கர்ப்பமாகி உள்ளார்.

    இதையடுத்து சிறுமியின் பெற்றோர் அருகே உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். 

    அங்கு சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில்  புகார் அளித்தனர். 

    புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மங்கையர்க்கரசி வழக்கு பதிவு செய்து முகமது பாஷாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
    காவேரிப்பாக்கம் அருகே மூதாட்டியை அடித்து கொன்று ஏரிக்கரையில் பிணத்தை வீசியுள்ளனர்.

    நெமிலி:

    காவேரிப்பாக்கம் அடுத்த ஈராளச்சேரி கிராமத்தில் உள்ள ஏரிக்கரையின் ஓரமாக சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

    அந்த வழியாக சென்ற வர்கள் பிணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஈராளச்சேரி விஏஓ ராமதாஸிடம் தகவல் தெரிவித்தனர்.


    உடனடியாக அவர் காவேரிப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், ராஜன் உள்ளிட்ட போலீசார் மூதாட்டி பிணத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    முகம், உடல், கை கால்களில் காயங்கள் இருப்பதால் மூதாட்டியை மர்மநபர்கள் யாராவது கொலை செய்து ஏரிக்கரையில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர். 

    இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
    வாலாஜா அருகே எரிந்த நிலையில் வாலிபர் பிணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வாலாஜா:

    வாலாஜா அடுத்த விசி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஞானவேல்(வயது 27). இவர் அதே பகுதியில் வெல்டிங் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.

    இவருக்கு கலைவாணி என்ற மனைவியும், 3 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. ஞானவேலுக்கு மது அருந்தும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஞானவேல் வேலைக்கு செல்லாததால் வீட்டில் உள்ளவர்கள் கண்டித்துள்ளனர்.

    இதனால் அவர் குடும்பத்தாரிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவ்வப்போது சண்டையிட்டு கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விடுவார். 

    சிலநாட்கள் கழித்து மீண்டும் வீடு திரும்புவார். இதேபோல் கடந்த 14-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. 

    இந்த நிலையில் நேற்று வாலாஜா ரபிக் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத ஒரு இடத்தில் பாதி எரிந்த நிலையில் ஆண் பிணம் கிடப்பதை அவ்வழியாக சென்றவர்கள் நேற்று மாலை பார்த்துள்ளனர். 

    சம்பவம் குறித்து வாலாஜா போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் காண்டீபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தவர் வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்த ஞானவேல் என்பது தெரியவந்தது. 

    மேலும் அவருடைய பைக் அருகில் இருந்தது. அந்த பைக்கில் இருந்து பெட்ரோல் எடுத்து தனக்குத்தானே ஊற்றி கொண்டு தீக்குளித்து இறந்து இருக்கலாம் என போலீசார் விசாரணையில் கூறப்படுகிறது. 

    இதனையடுத்து போலீசார் அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வாலாஜா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சமரசம் ஆக கூடாது என அனைத்துத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் கலெக்டர் பேசினார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் மற்றும் சட்டம், ஒழுங்கு, சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    பல்வேறு துறைகளில் நீதிமன்ற வழக்குகள் ஆகஸ்ட் மற்றும் நவம்பர் மாதங்களில் லோக் அதாலத் நிகழ்வுகளின்போது நீண்டகால உடனடி தீர்வு காண சமரசம் ஏற்பட கூடிய வழக்குகளை அதிகப்படியாக தீர்வு காண வேண்டும். 

    குறிப்பாக வருவாய்த்துறையின் மூலம் வா£¤சு சான்றிதழ் வேண்டி நிலுவையில் உள்ள வழக்குகளை முடிக்க வேண்டும்.அனைத்து துறைகளும் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து உடனடியாக அறிக்கை அளிக்க வேண்டும். 

    ஒவ்வொரு மாதமும் இதன் மீது தனிக்கவனம் செலுத்தி எவ்வளவு வழக்கு முடிக்கப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்யப்படும். மேலும் நீதிமன்ற அவமதிப்பு வரை வழக்குகளைத் அலுவலர்கள் கொண்டு செல்ல வேண்டாம். 

    அது போன்ற நிகழ்வுகள் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.நீர்நிலை புறம்போக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் வகையில் எவ்வித சமரசத்திற்கும் இடம் அளிக்காமல் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றிட வேண்டும்.

     குடியிருப்புகளுக்கு மாற்று இடம் ஒதுக்கி அவர்கள் அந்த இடத்தில் குடிபெயர அறிவுரைகள் வழங்கி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். 

    குடியிருப்பு வாசிகளுக்கு முறையாக தகவல் தொ¤வித்தும், சமாதானக் கூட்டம் நடத்தியும் ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும்.ஒவ்வொரு மாதமும் எவ்வளவு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு உள்ளது என்பது குறித்து மாவட்ட வா£¤யாக அரசுக்கு மாவட்டத்தின் சார்பில் அறிக்கை அளிக்கப்பட வேண்டும்.

    அதேபோன்று ஊராட்சிகளில் ஜல் ஜீவன் மிஷன் குடிநீர் திட்டப் பணிகள் நிலவரங்கள் குறித்து விவரங்கள் அளிக்க வேண்டும். 

    மேலும் ஒருங்கிணைந்த வேளாண்மை திட்டத்தின் கீழ் கிராமப் பகுதியில் 5 வருடங்களுக்கு மேல் வேளாண்மை செய்யாத தா¤சு நிலங்கள் உள்ள இடங்களை கண்டறிந்து, அவற்றை மீண்டும் பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த வேளாண் திட்டம் ஊரக வளர்ச்சி துறை, கால்நடைத்துறை, கூட்டுறவுத் துறை, முன்னோடி வங்கிகள் போன்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து இந்த நிலங்களில் விவசாயிகள் மீண்டும் விவசாயம் தொடங்கிட ஒருங்கிணைந்த வேளாண் திட்டத்தை முன்னெடுக்கும் பணியினை வேளாண் துறையினர் மேற்கொள்ள வேண்டும். 

    அதற்கான அறிக்கையை அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டும். இவர் அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், மாவட்ட வருவாய் அலுவலர் முஹம்மது அஸ்லம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட கலெக்டா¤ன் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
    ×