என் மலர்
உள்ளூர் செய்திகள்

மூதாட்டி பிணம்
காவேரிப்பாக்கம் அருகே மூதாட்டி அடித்து கொலை
காவேரிப்பாக்கம் அருகே மூதாட்டியை அடித்து கொன்று ஏரிக்கரையில் பிணத்தை வீசியுள்ளனர்.
நெமிலி:
காவேரிப்பாக்கம் அடுத்த ஈராளச்சேரி கிராமத்தில் உள்ள ஏரிக்கரையின் ஓரமாக சுமார் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார்.
அந்த வழியாக சென்ற வர்கள் பிணத்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஈராளச்சேரி விஏஓ ராமதாஸிடம் தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அவர் காவேரிப்பாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், ராஜன் உள்ளிட்ட போலீசார் மூதாட்டி பிணத்தை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முகம், உடல், கை கால்களில் காயங்கள் இருப்பதால் மூதாட்டியை மர்மநபர்கள் யாராவது கொலை செய்து ஏரிக்கரையில் வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்று சந்தேகப்படுகின்றனர்.
இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story






