என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலிபர் பிணம்.
ஆற்காடு அருகே வேலூர் வாலிபர் மர்ம சாவு
ஆற்காடு அருகே வேலூர் வாலிபர் மர்ம சாவு குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
வேலூர் மாவட்டம், ஓல்டு டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சுலைமான் (வயது 20). இவர் ஆற்காடு அடுத்த கீழ்விஷாரம் பகுதியிலுள்ள தனது அண்ணன் வீட்டில் தங்கி இருந்து இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார்.
இவர் தனது உறவினர்களிடம் வேலூருக்கு சென்று வருவதாக நேற்று கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில் சென்னை பெங்களூர் சர்வீஸ் சாலையின் அருகே நிலத்தில் வேலி கல்லில் துணியால் கழுத்தில் சுற்றி இறந்த நிலையில் சுலைமான் பிணமாக கிடந்தார்.
இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ஆற்காடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சுலைமான் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் வழக்கு பதிவு செய்து சுலைமானை யாராவது அடித்து கொலை செய்து இங்கு வந்து வீசிசென்றார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






