என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    வாலாஜா பஜாரில் 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா நகராட்சியில் உள்ள தினசரி மார்கெட்டில் நேற்று மாலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் மளிகை கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டார். 

    வாலாஜா எம்.பி.டி. ரோடு, தினசரி மார்கெட், அனந்தலை ரோடு, அனைக்கட்டு ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள மளிகை கடைகளில் ஆய்வு செய்தார். அப்போது டீ கப், பிளாட்டிக் பிளேட், கவர் உள்ளிவை களை பறிமுதல் செய்தார்.

    சுமார் 35 கடைகளுக்கு மேல் ஆய்வு செய்து 4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கைப்பற்றி அந்த கடைகளுக்கு சுமார் ரூ.37 ஆயிரத்து 500 அபராதம் விதிக்க நகராட்சி நகராட்சி ஆணையருக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உத்தரவிட்டார். 

    ஆய்வின் போது நகராட்சி ஆணையாளர், வட்டாட்சியர் ஆனந்தன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் வருவாய்த் துறையினர் ஆகியோர் உடனிருந்தனர்.
    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    நெமிலி:

    ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று அதிகாலை 1.25 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது.

    அப்போது அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் ஆனந்தன் ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை செய்தனர். 

    அதில் முன்பக்க பொதுப் பெட்டியில் உள்ள கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த பையை திறந்து பார்த்தபோது அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. 

    அதனை ரெயில்வே போலீசார்  பறிமுதல் செய்து கஞ்சாவை கடத்தியது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரக்கோணத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    நெமிலி:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த பொதுமக்கள் தவிர்க்கவும் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் அரக்கோணத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். அப்போது திடீரென்று பஜார் தெருவிற்கு சென்று ஒவ்வொரு கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த சில கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    அதனை பறிமுதல் செய்து வியாபாரிகள் இடையே பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இதற்கு மாற்றான மாற்று பொருளை பயன்படுத்தி வியாபாரம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். 

    தொடர்ந்து இதுபோன்று பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வந்தால் கடைகளுக்கு சீல் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். 

    மேலும் நகராட்சி ஆணையரிடம் இதுபோன்ற பணிகளை ஆய்வு மேற்கொண்டு கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். சுமார் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப் பட்டு நகராட்சி பணியாளர்கள் எடுத்துச் செல்லப்பட்டது. 

    ஆய்வின்போது நகராட்சி ஆணையர் லதா, தாசில்தார் பழனிராஜன், நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    ஆற்காட்டில் சமையல் மாஸ்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ஆற்காடு டவுன் ராமசாமி தெருவை சேர்ந்தவர் திருமால் (வயது 56). இவரது மனைவி தனலட்சுமி. மகன் மணிகண்டன். மணிகண்டன் டிப்ளமோ படித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் இருந்த திருமால் திடீரென காணாமல் போனார். இதனைக் கண்ட அவரது மகன் மணிகண்டன் தந்தையை தேடி கொண்டு சென்றார். வீட்டில் இருந்து 30 அடி தூரத்தில் உள்ள ஒரு தெரு சந்தில் திருமால் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார். இதனைக் கண்ட மணிகண்டன் கத்தி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து திருமாலை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல முயன்றனர்.

    அதற்குள் திருமால் துடிதுடித்து இறந்தார். அவரது தலையின் பின்பக்கத்தில் இரும்பு ராடால் தாக்கிய காயங்கள் இருந்தது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமாலின் மனைவி தனலட்சுமி, மகன் மணிகண்டன் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமால் கொலை செய்யப்பட்ட இடத்தில் கஞ்சா விற்பனை கனஜோராக நடந்து வருகிறது. இதனை திருமால் தட்டிக் கேட்டதால் அவரை கஞ்சா வியாபாரிகள் கொலை செய்தார்களா? அல்லது முன்விரோத காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் ஆற்காடு கஸ்பா பகுதியை சேர்ந்த 3 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை பாலாற்றங்கரையில் அமைந்துள்ள கோவிலை இடிக்க கூடாது என இந்து முன்னணியினர், பக்தர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பாலாற்றங்கரையோரம் 35 ஆண்டுகளுக்கு முன்னால் மிசிறி நகர் மனைப் பிரிவில் குடியிருப்பு பகுதிகள் அமைக்கப்பட்டது. அப்போது அந்த பகுதியில் ஒரு காளி கோவில் அமைத்து வழிபாடு நடந்து வந்தது. காலப்போக்கில் கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி புளியங்கண்ணு சேர்ந்த மணி என்பவரிடம் பராமரிக்க ஒப்படைக் கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில் காளி கோவில் வளாகத்தில் பிரத்யங்கராதேவி கோவில் அமைக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. நூற்றுக்கணக்கானோர் வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகை நாட்கள் அமாவாசை, பவுர்ணமி சமயத்தில் உலக நன்மை வேண்டி விசேஷ பூஜைகள் நடக்கும். 

    இதனால் இந்த பிரத்யங்கரா தேவி கோவில் சுற்றுப்பகுதிகளில் பிரசித்தி பெற்று பல இடங்களில் இருந்த பக்தர்கள் குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இங்கு வந்து பூஜை நடத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை நகராட்சி கமிஷனர் கோவில் நிர்வாகத்துக்கு கடந்த 16-ந்தேதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். 

    அதில் பிரத்யங்கரா தேவி கோவில் அமைந்துள்ள பகுதி நகராட்சி பூங்கா அமைக்க மனை பிரிவு ஏற்படுத்திய நேரத்தில் ஒப்படைப்பு செய்யப்பட்ட பகுதி. ஆகவே கோவில் நிர்வாகம் கோவிலை அப்புறப்படுத்த வேண்டும் மீறினால் நகராட்சி அப்புறப்படுத்தும் என கூறியுள்ளார். 

    நகராட்சியின் இந்த அதிரடி நோட்டீஸ் குறித்து தகவல் அறிந்த பக்தர்கள் ஆவேசமடைந்துள்ளனர். இந்த கோவில் இருக்கும் இடத்தை பராமரிக்க மனைப்பிரிவு அமைத்தவர் முறைப்படி ஒப்புதல் கடிதம் கொடுத்துள்ளார். 

    மேலும் வருவாய் துறையினர் இடத்தை பற்றி குறிப்பிடும் போது சிறுவர் பூங்கா மற்றும் பிரத்யங்கிரா தேவி கோவில் இடம் என குறிப்பிட்டுள்ளனர் கூறப்படுகிறது. இந்த கோயிலை சுற்றி மரங்கள் வைத்து பூங்கா போல் பராமரிக் கப்பட்டும் வருகிறது. 

    இந்நிலையில் குறிப்பிட்ட இந்த இடத்தின் மீது மட்டும் கண் வைத்து இடிக்க முன்வருவது ஏன் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில் கோவிலை இடிக்கக் கூடாது என்று கோரி இந்து முன்னணியினர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட செயலாளர் மோகன் ஆகியோர் கோவில் நிர்வாகி மணி மற்றும் பக்தர்களுடன் ராணிப்பேட்டை சப்& கலெக்டர் அலுவலகம் வந்தனர். 

    அங்கு அவர்கள் பிரத்தியங்கரா தேவி கோவிலை இடிக்க கூடாது என்று கூறி நேர்முக உதவியாளர் சண்முக சுந்தரத்திடம் மனு அளித்தனர். மேலும் அவர்கள் ராணிப்பேட்டை நகராட்சி சேர்மன், ராணிப்பேட்டை கமிஷனரிடம் மனு கொடுத்தனர்.
    பனப்பாக்கம் அருகே பொது மக்களுக்கு இடையூறு செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த ஓச்சேரி பகுதியை சேர்ந்த சீனிவாசன் (26) இவர் நேற்று ஓச்சேரியில் இருந்து பனப்பாக்கம் செல்லும் ஜங்சன் சாலையில் வரும் வாகனங்களை மடக்கி அதை சேதபடுத்தும் நோக்கில் எட்டு உதைப்பது தகாத வார்த்தைகளால் திட்டியும் மக்களை அச்சுறுத்தி நான் ஒரு ரவுடி என பொது இடத்தில் இடையூறு செய்த வாலிபரை அவலூர் போலிசார் பலமுறை எச்சரிக்கை செய்தும் ககேட்காததால் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    வாலாஜா அடுத்த ஓழுகூர் கிராமத்தில் மின்சாரம் தாக்கி விவசாயி பரிதாபமாக இறந்தார்.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த ஒழுகூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 71) விவசாயி. இவர் நேற்று வீட்டுக்கு அருகிலுள்ள விவசாய பம்பு செட்டில் நிலத்துக்கு நீர் பாய்ச்ச மோட்டாரை இயக்கி விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். பின்னர் மின் மோட்டாரை நிறுத்து வதற்காக சென்றவர். 

    அங்கு கீழே அறுந்து கிடந்த மின்சார வயரை கவனிக்காமல் மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு மயங்கிய நிலையில் கடந்தார். 

    அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு வாலாஜா அரசு மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து வாலாஜா போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாணாவரம் பகுதியில் புதிதாக போடப்பட்டுள்ள தார் சாலை தரம் குறித்து கலெக்டர் திடீர் ஆய்வு
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் ஊராட்சி சேந்தமங்கலம்& மகேந்திரவாடி வழியாக வெளிதாங்கிபுரம் மோட்டூர் ஊராட்சிக்கு ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் 3.03 கி.மீ நீளத்திற்கு புதியதாக போடப்பட்டுள்ள 2 அடுக்கு தார் சாலையின் தரத்தினை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டு நேற்று மாலை ஆய்வு செய்தார். 

    இந்த ஆய்வின் போது சாலையில் 4 கல்வெட்டு, கழிவுநீர் கால்வாய், 180 மீட்டர் நீளத்திற்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் துகள்கள் பயன்படுத்தி சாலை போடப்பட்டுள்ளது. இதனை நேரடியாக பார்வையிட்டு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆய்வு செய்தார். 

    இந்த சாலையில் ஒரு சதுர அடிக்கு 110 கிராம் பிளாஸ்டிக் துகள்கள் வீதம் என சுமார் 1250 கிலோ பிளாஸ்டிக் துகள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாலையில் 2 புறமும் மண் கொட்டப்பட்டு சாலை அரிப்பில்லாமல் தரமாக அமைக்கப்பட்டுள்ளது என பொறியாளர்கள் கலெக்டரிடம் தெரிவித்தனர். 

    தார் சாலையின் சாய்வு தளம் எவ்வளவு என்பதை சமதள மாணியை வைத்து ஆய்வு செய்தால் சாய்தளம் 2 பக்கத்திற்கும் சுமார் 3 சதவீதம் வரை இருக்கலாம் ஆய்வுக்கு பின் சரியான அளவிற்கு உள்ளது என கண்டறியப்பட்டது. 

    தார் சாலையில் ஒரு சதுர அடிக்கு தோண்டி எடுத்து தார்சாலை 20 மி.மீ. தடிமன் உள்ளதா என பரிசோதித்து உறுதி செய்தனர். பின்னர் தார்சாலை அனைத்து பொருட்களுடன் தாரின் அளவு எவ்வளவு என்பதை 0.5 கி.கி அளவு எடை போட்டு ஜல்லி கற்களுடன் தார் கலந்துள்ள அளவு எவ்வளவு என்பதை பரி-சோதனை எந்திரத்தை கொண்டு பரிசோதனை செய்தனர். 

    ஜல்லி கற்கள் மற்றும் தார்களை துண்டுகளாக உடைத்து அதை இயந்திரத்தில் போட்டு பெட்ரோல் ஊற்றி தாரினை பிரித்து எடுத்து முழுமையாக பிரித்தெடுத்த பின்னர் ஜல்லி கற்கள் அளவீடு செய்யப்பட்டு 0.48 கி. கி எடை கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டது. சுமார் 4 சதவீதம் அளவிற்கு ஜல்லி கற்களுடன் கலக்கப்படுகிறது. இறுதியில் அளவீடு செய்து கணக்கிடப்பட்டு உறுதி செய்யப்பட்டது. 

    இதனை ஒவ்வொன்றாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அளவு செய்து ஆய்வு செய்தார். பின்னர் உரிய தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது என பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரிடம் கலெக்டர் தெரிவித்தார். 

    இந்த ஆய்வின் போது ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் சீனிவாசன், உதவி செயற்பொறியாளர்கள் தனசேகரன்,  அரிகிருஷ்ணன், உதவி பொறியாளர் சுஜா, ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
    அரக்கோணத்தில் தண்டவாள பராமரிப்பு பணியால் 19 ரெயில்கள் 4 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    அரக்கோணம்:

    கோவை, பெங்களூர், மைசூர், திருப்பதி மற்றும் மின்சார ரெயில்கள் என 19 ரெயில்கள் 4 நாட்களுக்கு பகுதி மற்றும் முழுமையாக ரத்து செய்யப்பட்ட திடீர் அறிவிப்பு பயணிகளை கடும் அவதிக்குள்ளாக்கியது. 

    அரக்கோணம் யார்டில் தண்டவாள பராமரிப்பு பணிகளுக்காக சூப்பர் பாஸ்ட், எக்ஸ்பிரஸ் மற்றும் மின்சார ரெயில்கள்முழுமையாகவும், பகுதியாகவும் நேற்று, இன்று (20&ந்தேதி) மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. 

    சென்னையில் இருந்து மைசூர் செல்லும் (12609) ரெயில், கோவை இண்டர்சிட்டி ரெயில், (12679) பெங்களூர் ரெயில் (12607) ஆகியவை காட்பாடி ரெயில்வே ஸ்டேஷனில் இருந்து இயக்கப்படுகிறது. 

    அதேபோல் மறுமார்க்கத்தில் பெங்களூரில் இருந்து சென்னை வரை செல்லும் (12608) ரெயில், கோவை ரெயில் (12680), மைசூர் ரெயில் (12610) ஆகிய ரெயில்கள் அரக்கோணம், சென்னை சென்ட் ரல் வரை செல்லாமல் காட்பாடியில் இருந்து 4 நாட்களுக்கு இயக்கப்படும். 

    முழுமையாக ரத்து சென்னையில் இருந்து திருப்பதி வரை செல்லும் சப்தகிரி மற்றும் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் ரெயில்களான (16054, 16053) ஆகிய ரெயில்கள் முழுமை யாக ரத்து செய்யப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலம் தானாபூரில் இருந்து பெங்களூர் செல்லும் (12296) ரெயில் பெரம்பூர் வழியாக வராமல் ரேணிகுண்டா, மேல்பாக்கம், காட்பாடி வழியாக பெங்களூர் செல்கிறது. 

    மின்சார ரெயில்கள் ரத்து சென்னை மூர்மார்க்கெட்டில் இருந்து காலை 8.20 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் வரும் ரெயில் பகுதியாக ரத்து செய்யப்பட்டு கடம்பத்து£ர் வரை இயக் கப்படுகிறது.
     
    அதேபோல் காலை 9.10 மணிக்கு புறப்படும் ரெயில் திருவள்ளூர் வரையும், காலை 9.50 மணிக்கு புறப்படும் ரெயில் கடம்பத்து£ர் வரையும், காலை 10 மணிக்கு திருத்தணி வரை செல்லும் ரெயில் திருவள்ளூர் வரையும், காலை 11 மணிக்கு புறப்படும் ரெயில் கடம்பத்து£ர் வரையும் இயக்கப்படுகிறது. 

    அரக்கோணத்தில் இருந்து காலை 10 மணிக்கு சென்னை மூர்மார்க்கெட் செல்லும் ரெயில், திருத்தணியில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்படும் ரெயில், அரக்கோணத்தில் இருந்து காலை 11 மணி, காலை 12 மணி ஆகிய ரெயில்கள் முழுமையாக ரத்து செய் யப்படுகிறது. 

    அதேபோல் திருத்தணியில் இருந்து காலை 12.35 மணி, அரக்கோணத்தில் இருந்துபகல் 1.50 மணிக்கு புறப்படும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படு கிறது. 
    பயணிகளின் நலன் கருதி திருவள்ளூர் மற்றும் கடம்பத்து ரில் இருந்து சென்னைக்கு குறிப் பிட்ட இடைவெளியில் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

    பெங்களூர், மைசூர் ரெயில்கள் ரத்து செய்யப்படுவது குறித்து 10 நாட்களுக்கு முன்பே அறிவிப்பு வெளியானது. ஆனால் 11 மின்சார ரெயில்கள் முழுமையாகவும், பகுதியாகவும் ரத்து செய்யப்படுவது குறித்து நேற்று முன்தினம் திடீரென அறி விப்பு வெளியானது. அரக்கோணம் ரெயில்வே ஸ்டேஷனில் நேற்று காலை 8 மணி முதல் ரெயில்கள் ரத்து குறித்து அறிவிக்கப்பட்டது. 

    நேற்று, இன்று மற்றும் 26, 27 ஆகிய தேதிகளில் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் காலை 9.45 மணி முதல் பகல் 2 மணி வரை ரெயில்கள் ரத்து செய்யப்படு கிறது. 

    வாலாஜா சங்கர மடத்தில் மண்டலாபிஷேக, அனுஷ நட்சத்திர விழா நடைபெற்றது.
    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சங்கர மடம் தமிழ்நாடு பிராமணர் சங்கம் வாலாஜா தாலுக்கா கிளை மற்றும் ஸ்ரீ ஆதிசங்கரர் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில் மண்டலாபிஷேகம் மற்றும் அனுஷ நட்சத்திர விழா சங்கர மடத்தில் நடைபெற்றது.

    இவ்விழாவில் காஞ்சி சங்கர மடத்தின் ஆஸ்தான பாகவதர் கோடையிடி கோபால சுந்தர பாகவதரின் தலைமையில் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாலாஜா சங்கர மடத்தின் செயலாளர் ராஜசேகரன், தலைவர் சுந்தரேசன், ரவிகாந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பதிவுபெற்ற தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் வாலாஜா தாலுக்கா செயலாளர் வழக்கறிஞர் சிவசிதம்பரம் அனைவ-ரையும் வரவேற்றார்.

    வேலூர் மாவட்ட தலைவர் பெல் கிருஷ்ணகுமார் மற்றும் பல்லவர் நகர் சுவாமிநாத சர்மா, ரவி, ரமணன் ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.

    தமிழ்நாடு பிராமணர் சங்க வாலாஜா தாலுகா தலைவர் கல்யாணராமன், துணைத் தலைவர் வழக்கறிஞர் சிவலிஙகசர்மா, குமார், கிளை அமைப்பாளர் சந்திரசேகரன், ஜெயகாந்தன் ஆகியோர் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    முடிவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன் நன்றி கூறினார்.
    நெமிலி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த மேலபுலம் மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (வயது 57). இவருக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்தார்.

    இவர் கடந்த சில வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்கான சிகிச்சையும் எடுத்து வந்தார். 

    இந்நிலையில் நேற்று பிற்பகல் வழக்கம் போல வீட்டில் சாப்பிட்டு விட்டு தன்னுடைய நிலத்திற்கு சென்றார். அப்போது பயிருக்கு அடிக்க வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்து விட்டு மயங்கி கிடந்தார். 

    இதனை கண்ட பக்கத்து நிலத்துக்காரர் உடனடியாக அங்கே சென்று மயங்கி கிடந்த பெருமாளை மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். 

    இதுகுறித்து பெருமாளின் மனைவி கன்னியம்மாள் அவளூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப் இன்ஸ்-பெக்டர் மோகன், சீனிவாசன் உள்ளிட்ட போலீசார் பெருமாள் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடன் பிரச்சினையா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
    பாணாவரம் அருகே ஆட்டோ மீது பைக் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த புதிய பாலகிருஷ்-ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம்.இவரது மகன் பரத் (22). 

    ராணிப்பேட்டை தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பாணாவரத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு பைக்கில் சென்று வீடு திருபினார். 

    அப்போது பாணாவரம் மேல் வெங்கடாபுரம் சாலை அருகே உள்ள வளைவில் வந்த ஆட்டோ பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் பலத்த காயமடைந்து மயக்கம் அடைந்த பரத்தை அங்கிருந்-தவர்கள் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்-கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

    இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ×