என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் பச்சை பயறு, உளுந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டை:

    விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைத்திடவும், வருவாயை பெருக்கவும் தமிழக அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் நடப்பு ஆண்டில் பச்சை பயறு மற்றும் உளுந்து சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் பச்சைப்பயறு  சராசரி தரத்திற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.72.75 என்ற விலைக்கும், உளுந்து சராசரி தரத்திற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.63 மத்திய அரசு நிறுவனம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடப்பு ஆண்டில் பச்சை பயிறு 100 மெட்ரிக் டன்னும், உளுந்து 150 மெட்ரிக் டன்னும் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வருகிற 15.5.22-ந்தேதி வரை மட்டுமே செயல்படுத்தப்படும்.

    இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் ஆதார், வங்கி கணக்கு புத்தகம் நில சிட்டா மற்றும் அடங்கல் சான்றிதழ்களுடன் காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பதிவு செய்து கொண்டு பயன்பெறலாம். விலைப் பொருட்களுக்கான தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும். 

    மேலும் கூடுதல் விவரங்களுக்கு வேளாண் துணை இயக்குனர், வேளாண் வணிகம், ராணிப்பேட்டை, வேலூர் விற்பனை குழு செயலாளர், காவேரிப்பாக்கம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ஆகியோரை அணுகலாம். விவசாயிகள் விளைபொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்க தமிழக அரசு மேற்கொண்ட முயற்சியில் விவசாயிகள் முழுமையாக பயன்பெறலாம்.

    இவ்வாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
    சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சியில் கங்கை அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி கிராமத்தில் கங்கையம்மன் திருவிழா நடந்தது.

     திருவிழாவை முன்னிட்டு கங்கையம்மனுக்கு பால், தயிர், தேன், இளநீர், பன்னீர், குங்குமம் உள்ளிட்ட நறுமணப் பொருட்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு பல வண்ண மலர்கள் கொண்டு அலங்கரிக் கப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. 

    இதனை தொடர்ந்து கங்கையம்மன் சாமி அலங்காரம் செய்யப்பட்ட பெரிய தெரு, குளக்கரை வீதி, திடீர் நகர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    நெமிலி அருகே ஏரி மண் கடத்திய லாரிகளை பொதுமக்கள் சிறை பிடித்தனர்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் அடுத்த கலப்பலாம்பட்டு கிராமத்தில் பொதுப் பணித் துறைக்கு சொந்தமான ஏரி உள்ளது.இந்த ஏரியிலிருந்து நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேம்பாலம் கட்டும் பணிகளுக்காக சுமார் 6 மாத காலமாக மணல் எடுக்கப் பட்டு வருகிறது. 

    இந்நிலையில் நேற்று முன்தினம் விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமையிலும் 20 க்கும் மேற்பட்ட லாரிகளில் மணலை எடுத்து சென்றுள்ளனர். 

    இதைப் பார்த்த பொதுமக்கள் அரசு அனுமதி அளித்த அளவில் மண் எடுத்து செல்கிறார்களா? அல்லது சட்ட விரோதமாக மணலை கடத்தி தனியாருக்கு விற்பனை செய்கின்றார்களா? என்று பொதுமக் களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து நேற்று வழக்கம் போல ஏரியில் இருந்து மணலை எடுத்துக்கொண்டு 15 லாரிகள் பனப்பாக்கம் வழியாக சென்றது.அப்போது அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் லாரிகளை மடக்கி ஏரியில் இருந்து மணல் எடுத்து செல்ல உரிய ஆவணங்கள் உள்ளதா என்று கேட்டனர்.

    இதற்கு லாரி டிரைவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளிக்கவே ஆத்திர மடைந்த பொதுமக்கள் லாரிகளை சிறைப்பிடித்து பனப்பாக்கம் மயூரா தியேட்டர் எதிரே மணலை லாரிகளில் இருந்து கீழே கொட்ட வைத்தனர்.

    இதுகுறித்து பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் பொதுமக்களிடம்  இதுகுறித்து கேட்டறிந்தனர். 

    மணல் கடத்தும் நபர்கள் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் எந்தவித சமரசமுமின்றி உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்று பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    ஆற்காடு அருகே தனியார் பஸ் டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவை பள்ள நாகனேரி, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் வெங்கடேசன் (வயது 40). தனியார் பஸ்சில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், பிரசாந்த் என்ற மகனும் உள்ளனர்.

    நேற்று வெங்கடேசனின் தந்தைக்கு நினைவு நாள் என்பதால் பூமாலை மற்றும் பூஜைப் பொருட்கள் வாங்க கலவைக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். இரவு நீண்ட நேரம் ஆகியும் பூஜை பொருட்கள் வாங்கச் சென்ற வெங்கடேசன் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் வெங்கடே-சனை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் வெங்கடேசனை கண்டு-பிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் பல்லடம் ஏரி அருகே உள்ள விவசாய பம்புசெட்டில் வெங்கடேசன் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். 
    இதுகுறித்து தகவலறிந்த ராணிப்பேட்டை டிஎஸ்பி பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வேலூரில் இருந்து தடய அறிவியல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். 

    மோப்ப நாய் சிம்பா வரவழைத்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக் கவில்லை. இதையடுத்து வெங்கடேசனின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனை-க்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 

    கலவை போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மக்களை தேடி அரசு செல்கிறது என கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசினார்.

    வாலாஜா:

    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.

    கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-

    தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆண்டுதோறும் சிறப்பு கிராம சபா நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் கிராமசபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைய கிராம மக்கள் உறுதி எடுத்துள்ளனர். அதனை அடைய அனைவரும் செயல்பட வேண்டும். 

    மக்கள் அரசைத் தேடி வரும் காலம் மாறி மக்களை தேடி அரசு செல்லும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.இதனை கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தங்கள் பிரச்சினைகளை தெரிவித்து தீர்வுகாண வேண்டும். 

    ஊராட்சியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் திட்டங்களையும் மக்கள் அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளிப் படைத்தன்மையுடன் செயலாற்ற வேண்டும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    ராணிபேட்டை பெல் நிலையத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி கூடம் தொடங்கப்பட்டுள்ளது.
    ராணிப்பேட்டை

    ராணிப்பேட்டை பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் உற்பத்திக் கூடத்தை பொது மேலாளர் (பொறுப்பு) ராஜீவ் சிங் முன்னிலையில் பெல் நிறுவனத்தின் தலைவரும் மேலாண்மை இயக்குனருமான நளின் சிங்கல் தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    காற்று மண்டலத்திலிருந்து 99.5 சதவிகிதத் தூய்மையுடன் பிரித்தெடுக்கப்படும் இந்த ஆக்ஸிஜன் நமது தொழிலகத் தேவையை நிறைவு செய்வதுடன், மருத்துவ பயன்பாட்டிற்கும் உதவும். இங்கு உற்பத்தியாகும் ஆக்ஸிஜன் கொரோனா அலைகளின் போது, உயிர் காக்க பெரிதும் உதவும் என்றார்.
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.55.70 லட்சம் காசோலையை அமைச்சர் காந்தி வழங்கினார்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தொழில் குழுக்களின் வணிக நடவடிக்கையை தொடங்கி வைத்து 41 உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் 5 தொழில் குழுக்கள், 28 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.55 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான காசோலையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கினார். ஜெகத்ரட்சகன் எம்.பி., கூடுதல் திட்ட இயக்குனர் அருள்ஜோதி அரசன், மாவட்ட வருவாய் அலுவலர் குமரேஷ்வரன், திட்ட இயக்குனர்கள் லோகநாயகி, நானில தாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாலாஜா ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன் வரவேற்றார். 

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தொழில் குழுக்களின் வணிக நடவடிக்கையை தொடங்கி வைத்து 41 உற்பத்தியாளர் குழுக்கள் மற்றும் 5 தொழில் குழுக்களுக்கு ஒவ்வொரு குழுக்களுக்கும் தலா ரூ.75 ஆயிரம் வீதம் என ரூ.34.50 லட்சம் மற்றும் மகளிர் திட்டத்துறையின் மூலமாக 28 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி ரூ.21.20 லட்சம் என மொத்தமாக 55 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பிலான காசோலையை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மகளிர் குழுக்களுக்கு அதிக அளவில் மானியங்கள் மற்றும் கடன் உதவிகள் வழங்குகிறார். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் அனைத்து மகளிர்களும் முன்னேற வேண்டும். முன்னாள் முதல்வர் கருணாநிதி 1981ம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற போது தர்மபுரியில் மகளிர் குழுவினை தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆகிறது. 

    அதற்குள்ளாகவே தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகளின் ஒன்றான இலவச பேருந்து திட்டத்னை செயல்படுத்தியதன் விளைவாக அனைத்து மகளிர்களும் பயன் அடைந்து வருகின்றனர். 

    தற்போதைய ஆட்சியில் அனைத்து மகளிர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு அமைச்சர் காந்தி பேசினார். 

    முன்னதாக வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் குடோன் கட்டும் பணிக்கு அமைச்சர் காந்தி அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் ஒன்றிய குழு தலைவர்கள், துணைத் தலைவர், நகர மன்ற தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
    அரக்கோணம் ரெயில் நிலையத்தில் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    நெமிலி:

    அரக்கோணம் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சப் - இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார் நேற்று மாலை திருத்தணி மார்கத்தில் வரும் ரெயில்களில் சோதனை மேற்கொண்டனர். 

    அப்போது சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் கருடாதிரி எக்ஸ்பிரஸ் ரெயிலின் பெட்டிகளில் ஏறி சோதனை செய்த போது சுமார் 200 கிலோ ரேசன் அரிசி ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்றது தெரிய வந்தது. 

    இதனையடுத்து ரேசன் அரிசியை பறிமுதல் செய்து கடத்தலில் ஈடுபட்ட ஆந்திர மாநிலம் புத்தூரை சார்ந்த சந்திரா (38). மீது அரக்கோணம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    ராணிப்பேட்டை மாவட்ட தி.மு.க. நகர பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட திமுக நகர பேரூர் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பாரதி நகரில் உள்ள வேலூர் கிழக்கு மாவட்ட திமுக அலுவல கத்தில் நடைபெற்றது. 

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் அ.அசோகன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர்கள் சுந்தரமூர்த்தி, ராஜ்குமார், பொருளாளர் கண்ணையன், தலைமை செயற்குழு உறுப்பினர் சுந்தரம் மாவட்ட இளைஞரணி அமைப் பாளரும் எம்.எல்.ஏவுமான ஈஸ்வரப்பன், மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, தேர்தல் பொறுப்பாளர் திருவண்ணாமலை தலைமை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீதரன், தலைமை கழக வழக்கறிஞரணி சந்துரு ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் சிறப்பான முறையில் நடத்த வேண்டும் உள்பட பல்வேறு ஆலோசனை வழங்கி பேசினர். 

    கூட்டத்தில் நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    பாணாவரம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம்  பகுதியை சேர்ந்தவர் ராஜி (வயது 27). கட்டிடத் தொழிலாளியாக வேலைப் பார்த்துவந்தார். இவருக்கு, மனைவி மற்றும் 2 வயது பெண் குழந்தைகள் உள்ளனர். 

    இந்நிலையில் நேற்று ராஜி பாணாவரம் அருகிலுள்ள நெரிஞ்சந்தாங்கலில் உள்ள ஒருவரது வீட்டின் மாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். 

    அப்போது அவரின்கையிலிருந்த கம்பி எதிர்பாரா தவிதமாக அருகிலுள்ள மின்சார ஒயர்மீது பட்டு ராஜி தூக்கி வீசப்பட்டார். 

    அங்கிருந்தவர்கள் அவரை சோளிங்கர் அரசுமருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்ததில் ராஜி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து பாணாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
    நெமிலி அருகே மாணவிக்கு காதல் தொல்லை 2 பேர் கொடுத்த கைது செய்யப்பட்டனர்.
    நெமிலி:

    நெமிலி தாலுக்கா பெரப்பேரி கிராமத்தைச் சேர்ந்தவர் திலக் (வயது 19) மற்றும் செல்வராஜ் (24). கூலி வேலை செய்து வருகின்றனர். 

    இவர் 11-ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியிடம் காதலிக்க வற்புறுத்தியாக தெரிகிறது. இதனையடுத்து மாணவியின் தாயார் இது குறித்து அரக்கோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்கு பதிவு செய்து திலக் மற்றும் செல்வராஜை கைது போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.
    சோளிங்கரில் தடுப்பூசியால் உடல் நலம் பாதித்த மாணவிகளுக்கு அமைச்சர்கள் நேரில் ஆறுதல் கூறினர்.
    சோளிங்கர்:

    ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் தடுப்பூசி முகாம் நடந்தது. இதில் இந்த பள்ளி மாணவி எள்ளுப்பாறை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி (வயது12) மற்றும் மேல் வன்னியர் தெருவைச் சேர்ந்த பிரியதர்ஷினி ஆகியோர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    தடுப்பூசி செலுத்தியது முதல் லட்சுமிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மேலும் கண் பார்வை குறைய ஆரம்பித்தது. அவர் சோளிங்கர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற அவர் தற்போது வீட்டிலிருந்து மருந்துகள் எடுத்து வருகிறார்.

    இதேபோல மாணவி பிரியதர்ஷினிக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகு கை கால் செயலிழந்தது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது வருவாய் இன்றி வீட்டில் மருந்து எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் இன்று காலை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அமைச்சர் காந்தி ஆகியோர் மாணவிகளின் வீடுகளுக்குச் சென்று நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தனர். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க தேவையான உதவிகளை செய்வதாக அவர்கள் உறுதியளித்தனர். 

    நிகழ்ச்சியில் ஜெகத்ரட்சகன் எம்.பி. கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் உடனிருந்தனர். இதனைத் தொடர்ந்து சோளிங்கர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடந்தது. அமைச்சர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்து பேசினார்.
    ×