என் மலர்
உள்ளூர் செய்திகள்

வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் கிராம சபா கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசிய போது எடுத்த படம்
மக்களை தேடி அரசு செல்கிறது- அமைச்சர் காந்தி பேச்சு
மக்களை தேடி அரசு செல்கிறது என கிராம சபை கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசினார்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் தென்கடப்பந்தாங்கல் ஊராட்சியில் தேசிய பஞ்சாயத்துராஜ் தினத்தையொட்டி சிறப்பு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சர் காந்தி பேசியதாவது:-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினத்தையொட்டி ஆண்டுதோறும் சிறப்பு கிராம சபா நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் கிராமசபை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைய கிராம மக்கள் உறுதி எடுத்துள்ளனர். அதனை அடைய அனைவரும் செயல்பட வேண்டும்.
மக்கள் அரசைத் தேடி வரும் காலம் மாறி மக்களை தேடி அரசு செல்லும் வகையில் அரசு செயல்பட்டு வருகிறது.இதனை கிராம மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தங்கள் பிரச்சினைகளை தெரிவித்து தீர்வுகாண வேண்டும்.
ஊராட்சியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் திட்டங்களையும் மக்கள் அனைவருக்கும் தெரிந்து கொள்ளும் வகையில் வெளிப் படைத்தன்மையுடன் செயலாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story






