என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்ட காட்சி.
    X
    பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்ட காட்சி.

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை வியாபாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை

    அரக்கோணத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    நெமிலி:

    தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த பொதுமக்கள் தவிர்க்கவும் பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக உருவாக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

    இந்த நிலையில் அரக்கோணத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பார்வையிட்டார். அப்போது திடீரென்று பஜார் தெருவிற்கு சென்று ஒவ்வொரு கடைகளிலும் ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த சில கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    அதனை பறிமுதல் செய்து வியாபாரிகள் இடையே பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் இதற்கு மாற்றான மாற்று பொருளை பயன்படுத்தி வியாபாரம் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். 

    தொடர்ந்து இதுபோன்று பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி வந்தால் கடைகளுக்கு சீல் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார். 

    மேலும் நகராட்சி ஆணையரிடம் இதுபோன்ற பணிகளை ஆய்வு மேற்கொண்டு கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளவும் உத்தரவிட்டார். சுமார் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப் பட்டு நகராட்சி பணியாளர்கள் எடுத்துச் செல்லப்பட்டது. 

    ஆய்வின்போது நகராட்சி ஆணையர் லதா, தாசில்தார் பழனிராஜன், நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
    Next Story
    ×