என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
    X

    தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

    • கடலாடி அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனை அவரை அவரது மனைவி கண்டித்துள்ளார்.

    முதுகுளத்தூர்

    கடலாடி அருகே உள்ள ஏ.பாடுவனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மாசானம், (வயது 36). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்துவந்தார். மாசானத்திற்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த அவரை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த மாசானம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில் நைலான் கயிறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

    இதுகுறித்து மாசானத்தின் தந்தை சேமு கடலாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் ஜான்சிராணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×