என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி: 3 நாட்கள் மின் சப்ளையில் மாற்றம்
  X

  புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணி: 3 நாட்கள் மின் சப்ளையில் மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கும் பணியால் இன்று முதல் 3 நாட்கள் மின் சப்ளையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  • மின் சப்ளையில் ஏற்படும் சிரமங்களை பொது மக்கள் புரிந்து கூடுதல் திறன் உடைய மின்மாற்றி பொருத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  பரமக்குடி

  பரமக்குடி நகர் காட்டு பரமக்குடியில் உள்ள துணை மின் நிலையம் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இருந்த போதிலும் வளர்ந்து வரும் தொழில் நகரமான பரமக்குடி பகுதிக்கு மின் தட்டுப்பாடு நிலவி வந்தது.

  இதனை கருத்தில் கொண்டு மின்சார துறை சார்பில் 16 எம்.வி.ஏ திறன் கொண்ட பவர் டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணியை தற்போது தொடங்கியுள்ளது. இந்த பணி இன்று (19-ந் தேதி) முதல் வருகிற 21-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

  இதையொட்டி மின் சப்ளையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால் சிட்கோ பீடருக்கு காவனூர் உப மின் நிலையம் வழியாகவும், பெருமாள் கோவில், கமுதக்குடி பகுதிகளுக்கு பார்த்திபனூர் உப மின் நிலையம் வழியாகவும், எமனேஸ்வரம் பகுதிக்கு இளையான்குடி உப மின் நிலையம் வழியாகவும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

  எனவே தொடர்ந்து 3 நாட்களுக்கு மின் சப்ளையில் ஏற்படும் சிரமங்களை பொது மக்கள் புரிந்து கூடுதல் திறன் உடைய மின்மாற்றி பொருத்த ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  Next Story
  ×