search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சென்னையில் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் பங்கேற்பு
    X

    பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.

    சென்னையில் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் ஆசிரியர், அரசு ஊழியர்கள் பங்கேற்பு

    • சென்னையில் ஜாக்டோ-ஜியோ மாநாட்டில் 10 ஆயிரம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
    • சென்னை மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் கலந்துகொள்ள இருக்கிறோம் என்றார்.

    ராமநாதபுரம்

    தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் ராமநாதபுரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்டத்தலைவர் முருகேசன் தலை மையில் நடந்தது. மாவ ட்டச்செயலாளர் லிங்கதுரை முன்னிலை வகித்தார். பொருளாளர் முஜிபுர் ரஹ்மான் வரவேற்றார்.

    அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந் தேதி சென்னையில் முதல்-அமைச்சர் பங்கேற்கும் ஜாக்டோ-

    ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களையும் பங்கேற்கும் வகையில் மாவட்டம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.

    ஆசிரியர்கள் ராம நாதபுரம் மற்றும் பரமக்குடியில் இருந்து சென்னை மாநாட்டிற்கு செல்ல வசதியாக சிறப்பு ெரயில் விட நடவடிக்கை எடுப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட அமைப்புச்செயலாளர் கருணாகரன், ஒருங்கிணை ப்பாளர் சுரேஷ், சட்ட ஆலோசகர் நவின் மாரி, மகளிரணி தலைவர் மகாராணி, செயலாளர், செல்வராணி, செய்தி தொடர்பாளர் காளிதாஸ், தலைமை நிலைய செயலாளர் வழிவிட்ட அய்யனார், அந்தோணிசாமி, துணைத்தலைவர், அன்புசேவியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.முன்னாள் மாவட்ட அமைப்புச்செயலாளர் கனகராஜ் நன்றி கூறினார்.

    ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணை ப்பாளர் முருகேசன் கூறுகையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆசிரியர்- அரசு ஊழிய ர்களின் பேர மைப்பான ஜாக்டோ-ஜியோவிடம் நல்ல உறவில் இருந்து வருகிறார். அவ்வப்போது மாநில ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகளை அழைத்து பேசி குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிகிறார்.

    முதலமைச்சரிடம் ஆசிரி யர்-அரசு ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகளை எடுத்துக்கூறியுள்ளதால் இந்த மாநாட்டு மேடையில் சில கோரிக்கைகளை நிறைவேற்றி அறிவிப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது. சென்னை மாநாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் ஆசிரியர்- அரசு ஊழியர்கள் கலந்துகொள்ள இருக்கிறோம் என்றார்.

    Next Story
    ×