search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    என்ஜீன் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்
    X

    என்ஜீன் பழுதானதால் நடுக்கடலில் தத்தளித்த மீனவர்கள்

    • என்ஜீன் பழுதானதால் நடுக்கடலில் மீனவர்கள் தத்தளித்தனர்.
    • கடலோர பாதுகாப்பு போலீசார் மீட்டனர்.

    பனைக்குளம்

    ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தோணித்துறை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது40). இவருக்கு சொந்தமான நாட்டு படகு நாகசாமி(58), வடிவேலு(32), அருண் குமார்(22), சதீஸ்குமார்(22), கிருஷ்ணகுமார்(22) ஆகியோர் நேற்று காலை மீன்பிடிக்க சென்றனர்.

    அவர்களுடன் செல்வ ராஜூம் சென்றார். அவர்கள் நடுக்கடலில் சென்றபோது திடீரென படகில் இருந்த என்ஜீன் பழுதானது.

    இதனால் படகில் இருந்த 6 மீனவர்களும் தத்த ளித்தனர். இதுபற்றி மீன்வ ளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் கடலோர பாதுகாப்பு போலீசார் ரோந்து கப்பலில் சென்று பாம்பன் கடற்கரை விளக்கம் பகுதியில் இருந்து 10நாட்டிக்கல் தூரத்தில் பழுதாகி நின்ற படகில் இருந்த 6 மீனவர்களையும் மீட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உணவு வழங்கினர்.

    பின்னர் அவர்கள் கரைக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் பழுதான நாட்டு படகை ரோந்து கப்பலில் கட்டி இழுத்து வந்து மண்டபம் வடக்கு மீன்பிடித்துறை முகத்திற்கு கொண்டு வந்து சேர்த்தனர்.

    Next Story
    ×