search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரத்தில் தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் விநியோகம்
    X

    இந்தி திணிப்பை எதிர்த்து பாரதிநகரில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் பிரவின் தலைமையில் தி.மு.க.வினர் பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கினர்.

    ராமநாதபுரத்தில் தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் விநியோகம்

    • ராமநாதபுரத்தில் தி.மு.க.வினர் துண்டு பிரசுரம் விநியோகம் செய்தனர்.
    • மாவட்ட செயலாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் அரண்மனை அருகே தி.மு.க. சாா்பில் இந்தி திணிப்பு முயற்சியை கண்டித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு நகா் செயலாளா்கள் காா்மேகம், பிரவீன் தங்கம் ஆகியோா் தலைமை தாங்கினர். இதில் மாவட்ட செயலாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கினாா்.

    இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் இன்பா ஏ.என்.ரகு, தலைமை செயற்குழு உறுப்பினா் அகமது தம்பி மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

    மாவட்ட செயலாளர் காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. அறிவு றுத்தலின்படி பாரதி நகர் பஸ் நிறுத்தத்தில் மண்டபம் மேற்கு ஒன்றிய செயலாளர் கே.ஜே. பிரவின் தலைமை யில் கிளை செயலா ளர்கள் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கினர்.

    Next Story
    ×