search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்திர தனுஷ் தடுப்பூசி முகாமை கலெக்டர் தொடக்கம்
    X

    எமனேஸ்வரத்தில் இந்திர தனுஷ் தடுப்பூசி முகாமை கலெக்டர் விஷ்ணுசந்திரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    இந்திர தனுஷ் தடுப்பூசி முகாமை கலெக்டர் தொடக்கம்

    • குழந்தைகள்-கர்ப்பிணிகள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
    • விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி அளித்து பயன்பெற வேண்டும்.

    ராமநாதபுரம்

    தமிழகம் முழுவதும் பொது சுகாதார துறையின் மூலம் தீவிர இந்திர தனுஷ் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரத்தில் இந்த முகாமை மாவட்ட கலெக்டர் விஷ்ணுசந்திரன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்திய அரசின் ஆரோக்கியம் மற்றும் குடும்ப நலஅமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி தேசிய தடுப்பூசி முகாமில் 5 வயதிற்குட்பட்ட குழந்தை களுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்ப டுகின்றன. இத்தகைய ஊசி 12 வகையான நோய்களை தடுக்கும் சக்தி கொண்டதாகும். பல்வேறு காரணங்களால் சில குழந்தைகளுக்கு உரிய தடுப்பூசி போட்டுக்கொள் வதில்லை. ஆதனால் பல்வேறு நோய்கள் தாக்குவது கண்டறி யப்பட்டுள்ளது. எனவே 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

    ராமநாதபுரம் மாவட்ட த்தில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 1,13,577 பேர் உள்ளனர். அதில் 1845 குழந்தைகள் பல்வேறு காரணங்களால் முறையான தவணைகளில் தடுப்பூசி அளிக்கப்படாமல் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பூசி முகாம்களின் மூலமாக தடுப்பூசி அளிக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் அரசு மருத்துவனைகள் உட்பட 823 மையங்களில் தடுப்பூசி அளிக்கப்படும். விடுபட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி அளித்து பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் பொது சுகாதாரத் துறை துணை இயக்குநர் இந்திரா, வட்டார மருத்துவஅலுவலர் சுகந்தி,பூச்சியல் வல்லுநர் பாலசுப்பிரமணியன், கண்காணிப்பு அலுவலர் பக்கீர் முகமது மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×