என் மலர்
உள்ளூர் செய்திகள்

குடோனில் பதுக்கிய ரூ.3.84 லட்சம் புகையிலை பறிமுதல்
- ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.3.84 லட்சம் புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது.
- இந்த சம்பவம் குறித்து கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் புலிக்காரத் தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 57). இவர் ஆட்டோ டிரைவராக வேலை செய்து வருகிறார். இவருக்கு புகையிலை போடும் பழக்கம் இருந்துள்ளது.
இதையடுத்து தினமும் பாரிவள்ளல் பள்ளி அருகே பான் மசாலா விற்பனை செய்வரிடம் வாங்கி உபயோகித்து வந்துள்ளார். நேற்று காலை வழக்கம் போல் புகையிலை போட்டதும் திடீரென சண்முகத்திற்கு மயக்கம் ஏற்பட்டு வயிறு வலி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் போலீசார் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று புகையிலை விற்பனை செய்தவரிடம் விசாரணை நடத்தினர்.
அவரது தகவலின் பேரில் ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த கணேஷ் புகையிலை 396 கிலோ, கூல் லிப் புகையிலை 35 கிலோ, விமல் புகையிலை 61 கிலோ ஆகியவைகளை பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3,84,004. இது தொடர்பாக ராமநாதபுரம் பாசிப்பட்டரை தெருவை சேர்ந்த ஆதில் அமீன் (40), வைகை நகரைச் சேர்ந்த பாசித் ராஜா, தெற்கு தெரு நிஷார் அகமத் ஆகிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து, ஆதில் அமீனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான மற்ற இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.