search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராகுல் காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக விரோத செயல்- முத்தரசன் பேட்டி
    X

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன்.

    ராகுல் காந்தி எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக விரோத செயல்- முத்தரசன் பேட்டி

    • ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த பிறகு தீர்ப்பு எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
    • தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று போராட்டம் நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பரப்புரை கூட்டம் கர்நாடக மாநிலத்தில் நடந்தது.

    அதில் மோடி என்ற வார்த்தையை பயன்படுத்தி ராகுல் காந்தி பேசினார்.

    இப்படி அவர் பேசியதற்கு அவர் மீது குஜராத் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வழக்கு தொடர்ந்தார்.

    ஆனால் சம்பவம் நடந்த கர்நாடக மாநிலத்தில் இருந்து யாரும் வழக்கு தொடுக்கவில்லை.

    மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பு கூறியது.

    மேலும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசமும் கொடுத்தது.

    இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக விரோத செயல். இன்னும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது.

    அதற்குள் அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து பலர் பேசி வருகின்றனர்.

    மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டு வருகிறது.

    சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான்.

    ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த பிறகு அதன் பிறகு தீர்ப்பு எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    அதற்குள் மத்திய அரசு அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று போராட்டம் நடந்து வருகிறது. தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் கூறி வருகிறார்.

    அப்படி அமல்படுத்தினால் பொருளாதார சிக்கல் ஏற்படும் எனவும் கூறுகிறார்.

    மத்திய அரசை இவ்வாறு கூறுவதன் மூலம் மாநில அரசு என்ன செய்ய முடியும்.

    இருந்தாலும் ஜாக்டோ- ஜியோ மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் , பொருளாதார நிலை சீரான பிறகு படிப்படியாக அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார்.

    அதனால் அவர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×