search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புன்னைநகர் சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
    X

     சீனிவாச பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி.

    புன்னைநகர் சீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா

    • கும்பாபிஷேக விழா கடந்த 29-ந்தேதி தொடங்கியது.
    • நேற்று காலை 4 மணிக்கு கோபூஜை, 5-ம் கால ஹோமம் நடைபெற்றது.

    உடன்குடி:

    புன்னைநகர் வனத்திருப்பதி சீனிவாசப்பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 29-ந்தேதி தொடங்கியது.

    மறுநாள் காலை புண்யாஹ வாசனம், ரஷாபந்தனம், யாகசாலப் பிரவேசம், முதல் கால ஹோமம், இரவு பூர்ணாகுதி சாற்றுமுறை, 31-ந் தேதி காலை சதுஸ்தான ஆராதனம், 3-ம் கால ஹோமம், காலை சீனிவாச பெருமாள், பரிவார மூர்த்திகளுக்கும் அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல், பூர்ணாகுதி சாற்றுமுறை தீர்த்த ப்ரஸாத விநியோகம், மூலவர் உத்ஸவர் 81 கலச திருமஞ்சனம், சதுஸ்நான ஆராதனம், 4-ம் கால யாகசாலை ஹோமங்கள், தத்வநாஸ ஹோமம், உத்ஸவர் சயணாதிவாஸம், சாற்றுமுறை நடந்தது.

    நேற்று காலை 4 மணிக்கு கோபூஜை, 5-ம் கால ஹோமம் மகா பூர்ணாகுதி, யாத்ராதானம், கும்பபுறப்பாடு, காலை 5.20 மணிக்கு சீனிவாச பெருமாள், பத்மாவதி தாயார், பரிவார மூர்த்திகள், ராஜகோபுரம், விமானங்கள் கும்பாபிஷேகம் நடந்தது.

    மாலை 4.30 மணிக்கு பரதநாட்டியம், இரவு 7.30-க்கு கருட வாகனத்தில் சீனிவாச பெருமாள் திருவீதி உலா, வாண வேடிக்கை நடந்தது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×