என் மலர்
புதுக்கோட்டை
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது:–
பல்வேறு மதம், மொழி, கலாச்சாரம் கொண்ட இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதால் உலக நாடுகள் அனைத்திலும் இந்தியாவிற்கு ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தி வருகிறது.
அத்தகைய மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படும் பிரதமர் மோடிக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படும் ஜெயலலிதாவை அடக்கும் வல்லமை கருணாநிதிக்கு மட்டுமே உள்ளது. தி.மு.க–காங்கிரஸை தவிர ஜெயலலிதாவை யாராலும் வீழ்த்த முடியாது.
6 பேர் கொண்ட அணி இறுதி ஊர்வலம் நடத்த இப்போதே அணி சேர்ந்து விட்டனர். ஜெயலலிதாவிற்கு ஜால்ரா தட்டுவதை கொள்கையாக கொண்டவர்கள்தான் 6 பேர் கொண்ட அணி. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அனைவரும் தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கந்தர்வகோட்டை அருகே உள்ள கல்லுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருணாநிதி (வயது 48). இவர் ஒன்றிய தி.மு.க. முன்னாள் துணை செயலாளர் ஆவார். இவர் நேற்று முன்தினம் கந்தர்வகோட்டைக்கு தனது மோட்டார் சைக்கிளில் வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு வரை கருணாநிதி வீடு திரும்பவில்லை. இதனால் அவருடைய மனைவி தனலெட்சுமி மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் கருணாநிதியை தேடினர். இந்நிலையில் கந்தர்வகோட்டை-செங்கிப்பட்டி சாலையில் உள்ள கல்லுப்பட்டி என்ற இடத்தில் கருணாநிதி தலையில் பலத்த காயத்துடன் பிணமாக கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து கருணாநிதியின் மனைவி மற்றும் உறவினர்கள் அங்கு சென்று அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் இது குறித்து கந்தர்வகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு மற்றும் கந்தர்வகோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
பின்னர் புதுக்கோட்டையில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய் அந்த இடத்தை மோப்பம் பிடித்தபடி சுற்றிவந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. மேலும் சம்பவ இடத்துக்கு விரல் ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விரல் ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.
பின்னர் போலீசார் கருணாநிதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாநிதியை யாரேனும் அடித்து கொலை செய்தார்களா? என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அறந்தாங்கி:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த அரசர்குளம், வடபாதி பகுதியைச் சேர்ந்தவர் வள்ளிக்கண்ணு, (வயது 32). பரவாக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவி (40). இவர்களுக்கு கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்த தம்பதிக்கு சாருகான் (16), சஞ்சித் (9) என்ற இரு மகன்கள் உள்ளனர். கீற்று முடையும் தொழில் செய்து வரும் ரவிக்கு குடிப்பழக்கம் இருந்து வருகிறது. தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வரும் கணவர் ரவியை வள்ளிக்கண்ணு கண்டித்து வந்துள்ளார். இதனால் கண வன்–மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் கணவருடன் கோபித்துக் கொண்டு தனது குழந்தைகளையும் விட்டுவிட்டு வள்ளிக்கண்ணு தனது சொந்த ஊரான அரசர்குளம் வடபாதிக்கு சென்று விட்டார்.
நேற்று ரவி, தனது மனைவி வள்ளிக்கண்ணுவை பார்ப்பதற்காக தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வடபாதிக்கு சென்றார். அங்கு வள்ளிக் கண்ணுவின் தாயார் கனகம்பாளுக்கும், ரவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட அக்கம்பத்தினர் சண்டையை விலக்கி ரவியை ஊருக்கு அனுப்பியுள்ளனர்.
ஆனால் ரவி மீண்டும் இரவு வருவதாக கூறிச்சென்றுள்ளார். இதனால் வள்ளிக்கண்ணுவை அக்கம் பத்தினர் எதிர்த்த வீட்டு மாடியில் தங்க வைத்தனர். கூறியது போல் இரவு 8.30 மணியளவில் ரவி மீண்டும் வந்துள்ளார். அங்கு கனகம்பாளிடம் சண்டையிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு வந்த வள்ளிக்கண்ணு ரவியிடம் சமாதானம் பேசிவிட்டு வீட்டின் முன்பு தூங்க சென்றார்.
நள்ளிரவு 2 மணிக்கு எழுந்த ரவி மீண்டும் தனது மனைவியிடம் சண்டை போட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த ரவி கீழே கிடந்த பாறாங்கல்லை எடுத்து வள்ளிக்கண்ணுவின் தலையின் மீது போட்டுள்ளார். பலத்த காயம் அடைந்த வள்ளிக்கண்ணு சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தார்.
இதனை பார்த்த ரவி தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு அங்கிருந்து தலைமறைவானார். இதுபற்றி அக்கம் பக்கத்தினர் நாகுடி போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் புதுக்கோட்டை எஸ்.பி. சந்தோஷ் கபிமானி, அறந்தாங்கி இன்ஸ் பெக்டர் பாலமுருகன் மற்றும் நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலையுண்ட வள்ளிக்கண்ணுவின் உடலை மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து ரவியை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கந்தர்வகோட்டை:
கந்தர்வகோட்டை ஒன்றியம் புதுப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 30ந் தேதிநடைபெறுகிறது. எனவே புதுப்பட்டி துணை மின்நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் கல்லாக்கோட்டை, வேம் பன்பட்டி,
சிவந்தான்பட்டி, மட்டங்கால், வீரடிப்பட்டி, புதுப்பட்டி, மோகனூர், நம்புரான்பட்டி, பல்லவ ராயன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு காலை 8 மணி முதல் மாலை 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் குருபிரசாத் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே முக்கண்ணாமலைப்பட்டியை சேர்ந்தவர் அபுபக்கர் சித்திக். இவர் தனது வீட்டில் ஒரு கோழி வளர்த்து வருகிறார். இந்நிலையில் இந்த கோழி கடந்த பதினைந்து தினங்களாக தொடர்ந்து முட்டையிட்டு வந்தது. அந்த முட்டைகளை அபுபக்கர் சித்திக் தனது வீட்டில் உள்ள ஒரு அலமாரியில் சேமித்து வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அந்த அலமாரியில் இருந்து கோழி குஞ்சின் சத்தம் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அந்த அலமாரியை திறந்து பார்த்த அபுபக்கர் சித்திக் அதிர்ந்து போனார்.
அவர் சேமித்து வைத்திருந்த ஒரு முட்டையிலிருந்து ஒரு குஞ்சு வெளியில் வந்து கத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அடை வைக்கப்படாமல் கோழி குஞ்சு எப்படி வந்தது என திகைத்து போனார். இது குறித்து கேள்விப்பட்ட அப்பகுதி பொதுமக்கள் ஏராளமானோர் அந்த கோழிகுஞ்சை ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.
இது குறித்து அந்த பகுதியில் கோழிப்பண்ணை வைத்து இருக்கும் ஒருவர் கூறுகையில், ‘‘வெப்பத்தில் கோழிமுட்டை பொரிக்க வாய்ப்பு உள்ளது’’. தற்போது புதுக்கோட்டை பகுதியில் 102 டிகிரிக்கு மேல் வெயில் அடித்து வருகிறது.அதனால் ஏற்பட்ட அதிக வெப்பத்தில் கோழி அடைகாக்காமலேயே முட்டை பொரித்து குஞ்சு வெளிவந்துள்ளது என்றார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதி மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடங்களை புதுக்கோட்டை மற்றும் திருமயம் சட்டமன்ற தொகுதிக்கான மத்திய தேர்தல் செலவினப் பார்வையாளர் டாக்டர். திராஜ்ஜெயின், கலெக்டர் கணேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் அவர் கூறியதாவது:–
வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் தேர்தல் அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நமது மாவட்டத்திலுள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவின் போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் தேர்தல் நாள், வாக்குப் பதிவு நேரம், வாக்குச்சாவடி தலைமை அலுவலர், வாக்குச்சாவடி அலுவலர் எண்.1, அலுவலர் எண்.2, அலுவலர் எண்.3 ஆகியோரின் பணிகள், வாக்குப்பதிவிற்கு முன் செய்ய வேண்டிய பணிகள், வாக்குச்சாவடி முகவர் பணிகள், மாதிரி வாக்குப்பதிவு, வாக்குப் பதிவு ஆரம்பித்தல், வாக்குச்சாவடியில் நுழைய தகுதி படைத்தவர்கள், வாக்குப்பதிவின் போது பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டு, தபால் வாக்குப்பதிவு, மாற்றுத் திறனாளிகள் வாக்குப்பதிவு, வாக்களித்த வரிசை, பச்சை நிறம் முத்திரைத்தாள், வாக்குப்பதிவின் ரகசியம், செல்போன் பயன்பாடு, வாக்குப்பதிவு முடிவுற்றபின் மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்ற பல்வேறு பணிகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
மேலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளுதல் குறித்தும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை படிநிலை முறையில் இயக்குதல், வாக்குப்பதிவிற்கு முன்தினம் மற்றும் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள், மாதிரி வாக்குப்பதிவை நடத்துதல், மாதிரி வாக்குப்பதிவு முடிவை அறிவித்தல், வாக்குப்பதிவு இயந்திரத்தை தயார் செய்தல், வாக்குப்பதிவின் போதுள்ள நடைமுறைகள், வாக்குப்பதிவு முடிவிற்கு பிறகு மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான பல்வேறு பணிகள் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, அனைத்து வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்களும் இப்பயிற்சி வகுப்பினை முறையாக கற்று தேர்தலை எவ்வித இடையூறுமின்றி சிறப்பாக நடத்தி தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பயிற்சி வகுப்பில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் எஸ்.பி.அம்ரித், (புதுக்கோட்டை), சூரியகலா (திருமயம்), செல்வராஜ் (கந்தர்வக்கோட்டை), உதவி ஆணையர் (கலால்) மற்றும் பயிற்சி அலுவலர்பாலாஜி, வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையொட்டி இன்று செவ்வாய் கிழமை இரவு சிவன் கோவிலிலிருந்து அம்பாளை ஊர்வலமாக மேள தாளத்துடன் எடுத்து வந்து பிடாரி அம்மன் கோவிலில் எழுந்தருளச் செய்து அம்பாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் செய்து இரவு அம்பாளுக்கு காப்பு கட்டு நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரிகள், கோவில் பணியாளர்கள், மண்டகப் படி தாரர்கள் காப்பு கட்டிக்கொள்வர், தினமும் மதியம் ஒரு மணிக்கு கிடா வெட்டி உச்சி ப்பிலி நான்கு வீதிகளிலும் வலம்வந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
எட்டாம் நாள் திருவிழா வான 3–ந்தேதி செவ்வாய் கிழமை காலை பால்குடம் காவடி எடுத்தல் கிடா வெட்டுதல் நடைபெறும். மாலை 4 மணிக்கு அம்பாள் வீடு வீடாகச்சென்று தரிசனம் வழங்குதல் பின்னர் இரவு மேளதா ளத்துடன் ஊர் பொதுமக்கள் மண்டகப் படி தாரர்கள் வீடுவீடாகச் சென்று மதுகுடம் கிளப்புதல் அதிகாலை கோவில் முன்பாக தீமிதி நிகழ்ச்சி நடைபெறும்.
4–ந்தேதி அன்று மாலை அம்பாள் வீதி உலா வந்து ஊரின் அப்பால் எல்லைச்சட்டி உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு அம்பாளுக்கு காப்பு விளக்கப்படும். தினமும் மண்டகப்படி தாரர்கள் சார்பாக சிறப்பு வழிபாடுகள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.
அப்போது அவர் பேசியதாவது:–
தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா இலுப்பூர் பேரூராட்சி மக்களின் மிக நீண்ட நாள் கோரிக்கையான இலுப்பூருக்கு புதிய வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், இலுப்பூர் புதிய போக்குவரத்து பணிமனை, புதிய பேருந்து நிலையம், சார் நிலை கருவூலம், இலுப்பூர் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்வு, இலுப்பூரில் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய புதிய புறவழிச் சாலை, புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், புதிய ஆர். டி.ஓ. அலுவலகம், இலுப்பூர் சிவன் கோவில் மேம்பாடு செய்தல், நவீன பயணியர் நிழற்குடைகள், அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு புதிய கட்டிட வசதி, பயணியர் மாளிகை, இலுப்பூரிலிருந்து சென்னை, குமுளி, திருப்பதி போன்ற பல புதிய பேருந்து வழித் தடங்கள், புதிய அங்காடி கட்டிடங்கள், இலுப்பூர் பேரூராட்சிக்குட்பட்ட சாலைகளை மேம்பாடு செய்தல் என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இலுப்பூர் பேரூராட்சியை தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக மாற்றியுள்ளார்.
எனவே மீண்டும் ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர வெற்றி சின்னமாம் இரட்டை இலை சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.
அவருடன் இலுப்பூர் நகர செயலாளர் சத்யா கே.ராஜேந்திரன், பேரூராட்சி தலைவர் குருபாபு உள்பட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் சென்றனர்.
ஆலங்குடி:
தமிழக சட்டமன்ற தேர்தலில் பணம் கடத்தப்படுவதை தடுக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சேர்த்து 36 பறக்கும் படை குழுவினர் அமைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு, உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி பஞ்சநாதன் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில் அந்த காரில் அ.தி.மு.க. சின்னம் மற்றும் ஜெயலலிதா படம் பொறித்த பனியன்கள், தொப்பிகள் உள்ளிட்டவைகள் 9 சாக்கு மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து பறக்கும் படை அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர். இது தொடர்பாக ஆலங்குடி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயபாரதி விசாரணை நடத்தி வருகிறார்.
கந்தர்வக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை தொகுதியில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்றிரவு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–
50 ஆண்டுகளாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் தமிழகத்தை சீர்குலைத்து விட்டது. தமிழகத்தில் மதுக் கடைகளை கொண்டு வந்ததே தி.மு.க. அரசுதான்.ஆனால் இப்போது மதுக்கடைகளை மூடுவோம் என்று பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களை ஏமாற்றி வருகிறது. லாட்டரி சீட்டுகளை தமிழகத்திற்குள் கொண்டு வந்ததும் தி.மு. க.தான்.
பாலைவனப் பகுதியாக இருந்த குஜராத்தை பசுமையாக்கியவர் பிரதமர் நரேந்திரமோடி. நீர்வளத்தை பெருக்கி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் திட்டங்களை அங்கு கொண்டு வந்தனர். ஆனால் தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சிகளில் எந்த ஒரு பெரிய அணையும் கட்டப்படவில்லை. இதனால் இன்று தமிழகம் பாலைவனமாக மாறி வருகிறது.
தி.மு.க., அ.தி.மு.க. இரண்டும் இலவசம் என்ற பெயரில் டி.வி.மிக்சி, கிரைண்டர் என்று வழங்கி தமிழக மக்களை கையேந்த வைத்து விட்டனர். திராவிட கட்சிகளின் தலைவர்களை யாரும் எளிதில் சந்தித்து பேச வாய்ப்பும் இல்லை. இந்த நிலை மாற பா.ஜனதாவை வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.






