search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    ஜெயலலிதாவை எதிர்க்கும் திறன் திமுக கூட்டணிக்குத்தான் உண்டு: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
    X

    ஜெயலலிதாவை எதிர்க்கும் திறன் திமுக கூட்டணிக்குத்தான் உண்டு: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

    ஜெயலலிதாவை எதிர்க்கும் திறன் திமுக-காங்கிரசை தவிர வேறு யாருக்கும் இல்லை என்று ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பிரசாரம் செய்தார்.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பிரசாரம் செய்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:–

    பல்வேறு மதம், மொழி, கலாச்சாரம் கொண்ட இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதால் உலக நாடுகள் அனைத்திலும் இந்தியாவிற்கு ஒரு தனி மரியாதையை ஏற்படுத்தி வருகிறது.

    அத்தகைய மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படும் பிரதமர் மோடிக்கு, முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

    மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படும் ஜெயலலிதாவை அடக்கும் வல்லமை கருணாநிதிக்கு மட்டுமே உள்ளது. தி.மு.க–காங்கிரஸை தவிர ஜெயலலிதாவை யாராலும் வீழ்த்த முடியாது.

    6 பேர் கொண்ட அணி இறுதி ஊர்வலம் நடத்த இப்போதே அணி சேர்ந்து விட்டனர். ஜெயலலிதாவிற்கு ஜால்ரா தட்டுவதை கொள்கையாக கொண்டவர்கள்தான் 6 பேர் கொண்ட அணி. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட அனைவரும் தி.மு.க–காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×