என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவரங்குளம் அருகே பிடாரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று தொடங்கிறது
    X

    திருவரங்குளம் அருகே பிடாரி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழா இன்று தொடங்கிறது

    திருவரங்குளத்தில் ஊரின் காவல் தெய்வமாக விளங்கி வருகின்ற பிடாரி அம்மன் கோவில் சித்திரை கிடா வெட்டு திருவிழா இன்று நடக்கிறது.
    திருவரங்குளத்தில் ஊரின் காவல் தெய்வமாக விளங்கி வருகின்ற பிடாரி அம்மன் கோவில் சித்திரை கிடா வெட்டு திருவிழா இன்று நடக்கிறது.

    இதையொட்டி இன்று செவ்வாய் கிழமை இரவு சிவன் கோவிலிலிருந்து அம்பாளை ஊர்வலமாக மேள தாளத்துடன் எடுத்து வந்து பிடாரி அம்மன் கோவிலில் எழுந்தருளச் செய்து அம்பாளுக்கு சிறப்பு அபிசேக ஆராதனைகள் செய்து இரவு அம்பாளுக்கு காப்பு கட்டு நடைபெறும்.

    அதனைத் தொடர்ந்து கோவில் பூசாரிகள், கோவில் பணியாளர்கள், மண்டகப் படி தாரர்கள் காப்பு கட்டிக்கொள்வர், தினமும் மதியம் ஒரு மணிக்கு கிடா வெட்டி உச்சி ப்பிலி நான்கு வீதிகளிலும் வலம்வந்து சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    எட்டாம் நாள் திருவிழா வான 3–ந்தேதி செவ்வாய் கிழமை காலை பால்குடம் காவடி எடுத்தல் கிடா வெட்டுதல் நடைபெறும். மாலை 4 மணிக்கு அம்பாள் வீடு வீடாகச்சென்று தரிசனம் வழங்குதல் பின்னர் இரவு மேளதா ளத்துடன் ஊர் பொதுமக்கள் மண்டகப் படி தாரர்கள் வீடுவீடாகச் சென்று மதுகுடம் கிளப்புதல் அதிகாலை கோவில் முன்பாக தீமிதி நிகழ்ச்சி நடைபெறும்.

    4–ந்தேதி அன்று மாலை அம்பாள் வீதி உலா வந்து ஊரின் அப்பால் எல்லைச்சட்டி உடைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு அம்பாளுக்கு காப்பு விளக்கப்படும். தினமும் மண்டகப்படி தாரர்கள் சார்பாக சிறப்பு வழிபாடுகள் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது.

    Next Story
    ×