என் மலர்
புதுக்கோட்டை
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பொன்னமராவதி திருக்களம்பூர் பகுதியை சேர்ந்தவர் ராமசந்திரன் (வயது 52). கூலி தொழிலாளி. இவரது மகன் பிரபாகரன் (20).
இந்நிலையில் தந்தை – மகன் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்றிரவும் தகராறு ஏற்பட்டது. பின்னர் ராமச்சந்திரன்தூங்க சென்று விட்டார். இன்று அதிகாலை திடீரென எழுந்த பிரபாகரன் , தூங்கி கொண்டிருந்த ராமசந்திரனை கட்டையால் தாக்கினார். மேலும் தலையில் கல்லை தூக்கி போட்டார். இதில் ராமச்சந்திரன் தலைநசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதையடுத்து பிரபாகரன் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.
இது குறித்த தகவல் அறிந்ததும் பொன்ன மராவதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென் றனர். பின்னர் ராமச்சந்திரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
குடும்ப தகராறில் பிரபாகரன் தந்தையை கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. இது தொடர் பாக போலீசார் விசாரணை நடத்தி தப்பியோடிய பிரபாகரனை தேடி வருகின்றனர். தந்தையை மகன் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விராலிமலை ராஜகிரியை சேர்ந்தவர் அழகுமதி கூலித்தொழிலாளி. இவரது மகன் நவநீதிகிருஷ்ணன்( வயது 13) பாலகுறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம்வகுப்பு படித்து வந்தான். பொன்னமராவதி அருகே உள்ள சுந்தம்பட்டி காட்டு வீட்டு விலக்கில் உள்ள தனது பாட்டி செல்லம் வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தான்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும், சைக்கிளை எடுத்து கொண்டு சடையம்பட்டி ஒலியமங்களம் சாலையில் சென்றான். அப்போது பொன்னமராவதியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே நவநீதகிருஷ்ணன் இறந்தான். இது குறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி பேரூந்து நிலையத்தில் காமராஜர் சிலை நிறுவி பேரூந்து நிலையத்தில் காமராஜர் பெயர் வைக்கவேண்டும் என இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இளைஞர் காங்கிரஸ் கட்சி பிரமுகர் பாலமுரளி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:
பொன்னமராவதி பேரூந்து நிலையம் காமராஜர் பேரூந்து நிலையம் என பெயர் வைக்கப்பட்டு பெயர் பலகை இருந்தது. ஆனால் இப்போது அந்த பெயர் இல்லை. எனவே காமராஜர் பேரூந்து நிலையப்பெயர் பலகையினை பேரூராட்சி வைக்க ஆவணசெய்யவேண்டும்.
மேலும் பொன்னமராவதி பேரூந்து நிலையத்தில் காமராஜர் சிலையினை வைக்க வேண்டும் எனவும் அந்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் முதலாமாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திருமயம் பேருந்து நிலையம் அருகே காமராஜர் சாலையில் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் படத்திற்கு மெளன அஞ்சலியும், மலர் தூவி மரியாதையும் செய்யப்பட்டது.
பின்னர் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் ஜே.எம்.ஜமால்தீன் கலந்து கொண்டு திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் படிக்கும் சுமார் 110–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, பேனா மற்றும் பள்ளிக்கு டி.வி.டி. பிளேயர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் இளைஞர் நற்பணி மன்ற நண்பர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலர் எஸ்.ஜேம்ஸ், திருமயம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் அருள் ஆரோக்கிய மேரி, உதவி ஆசிரியர்கள் ராஜி, ரவி, பாரதி, தேன்மொழி, இளவரசி, லெட்சுமி, சத்துணவு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
விழாவில் சிறப்பாக பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு நினைவுப் பரிசும், பாராட்டுச் சான்றிதலும் வழங்கப்பட்டன. புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வர் பரிமளாதேவிக்கு காந்தி உலக மையத்தின் சார்பில் நினைவுப் பரிசும், கேடயமும் வழங்கப்பட்டது. விழாவில் தொழில் அதிபர் எஸ்.வி.எஸ்.ஜெயக்குமார், விபத்து தடுப்பு சங்கத் தலைவர் மாருதி மோகன்ராஜ், டீம் மருத்துவமனை அதிபர் டாக்டர். சலீம், தொழில் அதிபர் பார்த்திபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட புதுவாழ்வு திட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர்களை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட கலெக்டர் கணேஷ் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:–
தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இதன்படி புதுவாழ்வு திட்டமானது கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்காக 2006 முதல் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இத்திட்டம் மக்களை கொண்டே செயற்படுத்தும் திட்டமாகும்.
இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கென்று சிறப்புக் கவனம் செலுத்தி அவர்களது வாழ்க்கையை செம்மைப் படுத்தியும், மறுவாழ்வு கொடுத்தும் வருகின்றது. பிற துறைகளுடன் இணைந்து பிரதான நீரோட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும் இணைத்துள்ளது. மறுவாழ்வுப் பணிகள், வங்கி இணைப்பு, தொழில் பயிற்சிகள், சமூக நலத்திட்டங்கள் மற்றும் தனிநபர் தொழிற்கடன்கள் போன்றவை இதில் அடங்கும்.
மாற்றுத் திறனாளிகளின் தனித்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் மாற்றுத்திறனாளி களுக்கான 4வது மாநில அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டி தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக புதுவாழ்வு திட்டம் செயல்படும் பகுதிகளிலிருந்து 26 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
இதில் 35 தங்கம், 16 வெள்ளி மற்றும் 4 வெண்கலப்பதக்கம் வென்று மாநில அளவில் முதலிடம் பிடித்து ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பதக்கத்தினை பெற்றனர். மேலும், 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 2ம் இடம் பிடித்தனர்.மேலும் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான பாராலிம்பிக் போட்டியிலும் முதல் இடத்தினை பிடித்து மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதுடன் இப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு புதுவாழ்வு திட்டம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து பயிற்சி அளிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. மேலும் பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.3000 வீதம் வழங்க உத்தர விடப்பட்டுள்ளது . இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்நிகழ்ச்சியில் புதுவாழ்வு திட்ட மாவட்ட மேலாளர் வசுமதி, உதவி திட்ட மேலாளர்கள் கோபால், செந்தில் முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மணமேல்குடி அருகே பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள அந்தோணியார்புரம் பகுதியை சேர்ந்தவர் சல்மோன். மீனவர். இவரது மகன் ஆகாஷ் (வயது 14). இவன் விச்சூரில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் பள்ளிக்கு சொந்தமான வேனில் வீடு திரும்பினான்.
வேன் ஆகாஷ் வீட்டின் அருகே வந்து நின்றதும் அதில் இருந்து ஆகாஷ் இறங்கினான். அப்போது நிலைதடுமாறியதில் வேனின் பின்பக்க டயருக்கு அடியில் விழுந்தான். இதை கவனிக்காத டிரைவர் வேனை இயக்கினார். இதில் சக்கரத்தில் சிக்கிய மாணவன் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தான்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வேனின் பின் பக்க கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் மாணவன் ஆகாஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பொதுமக்கள் கூறும் போது, வேன் படிக்கட்டில் உடைந்த கம்பி நீண்டு கொண்டு இருந்ததால்தான், ஆகாஷ் கீழே விழுந்தான், எனவே இதற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான வேன் டிரைவர் வடக்கு மணமேல்குடியை சேர்ந்த கூத்தன் மகன் அய்யப்பன் என்பவரை தேடி வருகின்றனர்.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குழிபிறை அரசு உதவிபெறும் பள்ளியில் வட்டார அளவிலான குறுவட்ட கைபந்து போட்டி நடைபெற்றது
இந்த போட்டியில் திருமயம் வட்டாரத்தில் உள்ள திருமயம்,கோனாபட்டு, நற்சாந்துபட்டி, குழிபிறை, பொன்னமராவதி உட்பட 36 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் 360 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 16 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கும், 11ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 19 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கும், தனித்தனியே மூன்று பிரிவுகளாக கைபந்து போட்டி நடைபெற்றது. நாளை மாணவர்களுக்கான கைபந்து போட்டி நடைபெற உள்ளது.இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவர்கள்.
புதுக்கோட்டை:
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு நாளை யொட்டி ராமேஸ்வரத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக புதுக்கோட்டை மாவட்டம் லேனா விலக்கில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் 16 பேர் சைக்கிளில் அமைதி பேரணியாக சென்றனர்.
பேரணியை பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:–
ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள பிரச்சினைக்கு காரணம் காங்கிரஸ் தான். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த புர்கான்வானி ராணுவத்தால் கொல்லப்பட்டார். அந்த சமயத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் தீவிரவாதிகள் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினர். ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியாக ஜம்மு இருப்பதால் ராணுவத்திற்கு என்று ஒரு சில சட்ட விதிகளும் அனுமதியும் உள்ளன.
இன்றைக்கு கருணாநிதியோ, ப.சிதம்பரமோ மற்றும் சில உதிரி கட்சி தலைவர்களும் இரவில் நன்றாக தூங்குகிறார்கள் என்றால் அது ராணுவத்தின் தியாகமே காரணம். அப்படி இருக்கும் போது கருணாநிதி மற்றும் ப.சிதம்பரம் ஆகியோர் இந்திய ராணுவத்திற்கு எதிராக போராட்டம், ஆர்ப்பாட்டம் ஆகியவற்றை நடத்துவதும், ராணுவத்திற்கு எதிராக கருத்துக்களை தெரிவிப்பதும் தேச விரோத செயலாகும்.
யாரும் ராணுவத்திற்கு எதிராக வாய் திறக்கக் கூடாது. குறிப்பாக ப.சிதம்பரம் ராணுவத்திற்கு எதிராக பேசியதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். பொறுப்புணர்வோடு பேச வேண்டும். யாராக இருந்தாலும் காவல்துறை லாக்கப்பில் தாக்கப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அது ஒரு மனித உரிமை மீறலாகும்.
மேலும் மாதொருபாகன் என்ற புத்தகத்தை எழுதிய நபர் குறித்து நீதிமன்றம் ஒரு தீர்ப்பளித்துள்ளது. அந்த தீர்ப்பை நான் எதிர்க்கிறேன். இந்த புத்தகத்தை எழுதிய பெருமாள்முருகன் போன்ற வர்களால் தான் சமுதாயத்தில் கீழ்தரமான சிந்தனைகள் வளர்ந்து வருகிறது. இவர்கள் போன்றவர்கள் எழுதிய கதைகளை தமிழக முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றி புத்தகத்தை தடை செய்ய வேண்டும்.
வக்கீல்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காணலாம். ஏற்கனவே நீதிமன்றங்களில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வக்கீல்களின் போராட்டத்தால் அவைகள் மீண்டும் அதிகரிக்க கூடும். ச ட்ட திருத்தம் குறித்து ஒரு வேறு கருத்துக் கள் நிலவுகின்றன.
ஒரு சிலர் வரவேற் கின்றனர். ஒரு சிலர் எதிர்க்கின்றனர். எனவே அவற்றை பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்த்துக்கொள்ள வேண்டும். வக்கீல்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டால் மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுக்கோட்டை மார்த்தாண்டபுரம் பகுதியை சேர்ந்தவர் சரோஜா. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவர் மதுரை ஐகோர்ட் கிளையில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் மதியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டராக பணியாற்றி வரும் மணிகண்டன் (வயது 42) என்பவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி, தனது மருத்துவ படிப்பு செலவுக்காக ரூ.10 லட்சம் மற்றும் 33 பவுன் நகைகளை என்னிடம் வாங்கினார்.
இந்தநிலையில் மற்றொரு பெண்ணுடன் தொடர்பு வைத்து கொண்டு, என்னை திருமணம் செய்ய மறுத்து வருகிறார். மேலும் என்னிடம் வாங்கிய பணம் மற்றும் நகைகளை தரவும் மறுக்கிறார்.
இது குறித்து அரசு டாக்டர் மணிகண்டன் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பணம் மற்றும் நகையை பெற்று தர வேண்டும் என்று கூறியிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, இதுபற்றி புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தும் படி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் டாக்டர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியை அடுத்த கிருஷ்ணாஜி பட்டினத்தை சேர்ந்த மீனவர்களான ராஜாமுகமது, சுல்தான் ஆகியோர் நேற்று முன்தினம் மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்றனர். அவர்கள் வீசிய வலையில் கனமான ஒரு பொருள் சிக்கியதால் அவர்களால் வலையை இழுக்க முடியவில்லை.
இதைத்தொடர்ந்து ராஜாமுகமது கடலுக்குள் குதித்து வலையை சோதித்த போது அதில் ஒரு மோட்டார் சைக்கிள் சிக்கியிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் ரோந்து படகில் விரைந்து சென்று வலைக்குள் சிக்கிய மோட்டார் சைக்கிளை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். சிவப்பு கலர் மோட்டார் சைக்கிளான அதில் பதிவு எண் எதுவும் எழுதப்படவில்லை. எனவே அதன் என்ஜின் எண்ணை வைத்து உரிமையாளரை கண்டறியும் விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த மோட்டார் சைக்கிள் தீவிரவாதிகள் யாரும் பயன்படுத்தியதா? அல்லது ஏதாவது கொலை வழக்கில் தடயத்தை மறைப்பதற்காக கடலில் போடப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்னமராவதி:
பொன்னமராவதி வட்டார வளமையத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றலில் புரிதலை மேம்படுத்தும் புத்தாக்கப் பயிற்சியானது பொன்னமராவதி, நகரப்பட்டி, கொன்னையூர், ஆலவயல், காரையூர், சடையம்பட்டி, நல்லூர், மேலத் தானியம் ஆகிய 8 குறு வளமையங்களில் நடைபெற்றது. கொன்னையூர் குறு வளமையத்தில் நடைப்பெற்ற பயிற்சியினை வட்டார வளமைய மேற்பார்வையாளர் தேன்மொழி துவக்கி வைத்தார்.
மேலும் இப்பயிற்சியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச் சந்திரன், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் மாரியப்பன், உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ராமதிலகம், மாவட்ட பள்ளி செல்லாக் குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டு எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றல் குறித்து சிறப்புரையாற்றினர்.
அவர்கள் பேசும் போது, கல்வி கற்றல் என்பது ஒவ்வொரு குழந்தையின் அடிப்படை உரிமை. கற்றல் என்பது பாடநூல் வழியாக மட்டுமல்லாமல் பார்த்து, கேட்டு, தொட்டு உணர்ந்து கற்றுக்கொள்ளும் முறைதான் எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றல். எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக்கற்றலில் தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு கற்றல் அட்டைகள் கொண்டும், பாட நூல் கொண்டும், புரொஜெக்டர் மூலம் விளக்கப்பட்டது.
உற்று நோக்கி பதிவு செய்தல், பரிசோதனை, களப்பயணம், சிந்தித்து செயல்படுதல், வலுவூட்டல், குழு விவாதம் , செயல்திட்டம், புத்தகப் பூங்கொத்து, புத்தகப் பயிற்சி, குறைதீர் கற்பித்தல் , ஆரோக்கிய சக்கரம் , கால நிலை அட்டவணை, பள்ளிகளில் கற்றலில் பின் தங்கியுள்ள மாணவர்களின் வாசித்தல், எழுதுதல் திறனில் மேம்படுத்த சிறப்புப்பயிற்சி வழங்குதல் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.
எளிமைப்படுத்தப்பட்ட செயல் வழிக் கற்றலில் பள்ளிகளுக்கு தரநிலை வழங்கும் முறை பயிற்சித்தாள் கொண்டு விளக்கப்பட்டது. இப்பயிற்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள் செல்வகுமார், அன்பழகன், பரிசுத்தம், பச்சமுத்து, மதனகுமார், சரவணன், அழகுராஜா, சக்திவேல் பாண்டி, ரஹிமா பானு, புவனேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் ராம கிருஷ்ணன், ஜேம்ஸ் ஆரோக்கியராஜ், சுந்தர்ராஜ், கிருஷ்ணன், கமல், புவனேஸ்வரி ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.






