என் மலர்
செய்திகள்

திருமயம் அருகே அரசு உதவி பெறும் பள்ளியில் குறுவட்ட கைபந்து போட்டி
திருமயம் அருகே அரசு உதவிபெறும் பள்ளியில் வட்டார அளவிலான குறுவட்ட கைபந்து போட்டி நடைபெற்றது.
திருமயம்:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள குழிபிறை அரசு உதவிபெறும் பள்ளியில் வட்டார அளவிலான குறுவட்ட கைபந்து போட்டி நடைபெற்றது
இந்த போட்டியில் திருமயம் வட்டாரத்தில் உள்ள திருமயம்,கோனாபட்டு, நற்சாந்துபட்டி, குழிபிறை, பொன்னமராவதி உட்பட 36 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் 360 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை 14 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கும், 9ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 16 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கும், 11ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை 19 வயதிற்கு உட்பட்ட மாணவிகளுக்கும், தனித்தனியே மூன்று பிரிவுகளாக கைபந்து போட்டி நடைபெற்றது. நாளை மாணவர்களுக்கான கைபந்து போட்டி நடைபெற உள்ளது.இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெறுவர்கள்.
Next Story






