என் மலர்
செய்திகள்

பொன்னமராவதி அருகே பஸ் மோதி பள்ளி மாணவன் பலி
பொன்னமராவதி அருகே தனியார் பஸ் மோதி பள்ளி மாணவன் பலியானார்
பொன்னமராவதி:
விராலிமலை ராஜகிரியை சேர்ந்தவர் அழகுமதி கூலித்தொழிலாளி. இவரது மகன் நவநீதிகிருஷ்ணன்( வயது 13) பாலகுறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம்வகுப்பு படித்து வந்தான். பொன்னமராவதி அருகே உள்ள சுந்தம்பட்டி காட்டு வீட்டு விலக்கில் உள்ள தனது பாட்டி செல்லம் வீட்டில் தங்கியிருந்து படித்து வந்தான்.
நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும், சைக்கிளை எடுத்து கொண்டு சடையம்பட்டி ஒலியமங்களம் சாலையில் சென்றான். அப்போது பொன்னமராவதியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் பஸ் மோதி சம்பவ இடத்திலேயே நவநீதகிருஷ்ணன் இறந்தான். இது குறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story